ஏனைய கட்டுரைகள்
-தமிழில் காலக்கணிதம் - டாக்டர் பால.சிவகடாட்சம் ...
-காலம் கடந்தும் திருக்குறள் - திரு.குணரட்ணம் இராஜகுமார்+ ...
-தமிழ் நாவல் இலக்கியம் - தேவகாந்தன் ...
-An Introduction to Tamil Literature2 ...
-சங்க இலக்கியத்தில் அகத்திணை - லீலா சிவானந்தன் - ...
-சங்கீதம் சார்ந்த சிறுகதைகள் - பேராசிரியர் சு.பசுபதி ...
-Sangam Period: Practice of writing subjective literature and literary trends. ...
- சங்ககால அகத்திணை மரபுகள் - N சபா. அருள்சுப்பிரமணியம் ...
-காலக்கணிதத்தில் இந்தியர; பங்கு - லீலா சிவானந்தன் - ...
-திருப்புகழ்ப்பாடல்களின்இசையமைதி - பேராசிரியர் சு.பசுபதி ...
-செம்மொழித்தமிழ்: வரலாறு, இயல்புகள், பயன்பாடு பேராசிரியர; அ. சண்முகதாஸ்,Ph.D ...
-கனடாவில் வெளிவந்த கனடியத் தமிழ் புதினங்கள் - குரு அரவிந்தன் 31-05-2014 ...
- புகலிடத் தமிழ் நாவல் முயற்சிகள்! - வ.ந.கிரிதரன் ...
-ஜெயகாந்தனிற்குப் பின்னர் ஜெயகாந்தன் பற்றிய பார்வை - -அருண்மொழிவர்மன் ...
-உ வாழ்த்துரை ஆசியுரை - கவிஞர் கந்தவனம் ...
-அருணகிரியும் அகச்சான்றுகளும் - பேராசிரியர் சு.பசுபதி ...
-அகத்திணைமரபு- தலைமக்கள் ஆவாh; யாh;? - திருமதி. செல்வநாயகி ஸ்ரீதாஸ் ...
-தமிழ் நாவல் இலக்கியம் தேவகாந்தன் ...

உ வாழ்த்துரை ஆசியுரை - கவிஞர் கந்தவனம்

   
   
   
வாழ்த்துரை/ ஆசியுரை
 
 
 
(25.10.2014 சனிக்கிழமை மெய்யகத்தில் துரந்தை(வுழசழவெழ) தமிழ்ச்சங்க உறுப்பினருக்கு ஆற்றிய உரை.)
 
வாழ்த்துரை என்பதும் ஆசியுரை என்பதும் அடிப்படையில் ஒன்றுதான். ஒரு முக்கியமான வேறுபாடு என்னவென்றால், வாழ்த்துரை தமிழ்ச்சொல் ஆசியுரை தமிழ்ப்படுத்தப்பெற்ற வடமொழிச் சொல்.
 
வடமொழியில் வேதங்களையும் மந்திரங்களையும் ஓதிவருகின்றவரும் மணிப்பிரவாள நடையில் இன்றும் தமிழ்ப் பேசுகின்றவருமாகிய அந்தணருக்கு ஆசியுரை என்றும் மற்றும் எம்போன்றவருக்கு வாழ்த்துரை என்றும் ஒரு மரபு கனடாவில் பின்பற்றப்பட்டு வருகின்றது. அந்தணர; தமது ஆசியுரையில் இறையருளைத் தவறாது வேண்டுவர;. வாழ்த்துரை இறையருளை வேண்டியும் வேண்டாமலும் நிகழ்த்தப்படுவதுண்டு.  
 
வாழ்த்தரைகள் பலவகைப்படும். ஒரு நூல் வெளியீட்டில் வாழ்த்துரை செய்யப்படும் முறைபற்றிப் பேசும்வண்ணமே யான் கேட்கப்பட்டிருக்கிறேன். அதுவும் தேவையானதுதான். ஒரு வரையறை இருத்தல் எதற்கும் நல்லது. ஆனால் இலக்கண நூல்களில் இவைபற்றி அதிகம் பேசப்படாததால் எனது பட்டறிவைக்கொண்டு சில விளக்கங்களை முன்வைக்க விரும்புகின்றேன். 
 
வாழ்த்துரை என்றால் என்ன, அதனைச் செய்யத் தகுந்தவர; யாவர;, எவ்விதம் வாழ்த்துரை வழங்கப்படுதல் வேண்டும், எவ்வளவு நேரத்துக்கு அதனைச் செய்தல் வேண்டும், அதனாலாகும் பயன்கள் முதலியன பற்றித் தரப்பட்டிருக்கும் இந்த 20 நிமிடங்களுக்குள் முடிந்த அளவுக்குப் பேச  முற்படுகின்றேன்.
 
1. வாழ்த்துரை என்றால் என்ன?
 
வாழ்த்துரை என்பது ஒருவரது வாழ்க்கை நல்லவண்ணம் அமைய இனிய சொற்களை உளமார உரைப்பது. நல்லவண்ணம் வாழலாம் என்பது வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல். வாழ்வாங்கு வாழ்தலாவது நீதிவழுவா நெறிமுறையில் நிற்றல்.
 
(1) நூலாசிரியரது முயற்சி தொடர;ந்து வெற்றிபெறவும் (2) நூல் பல பதிப்புகளைக் காணவும் (3) விழா சிறப்பற நடக்கவும் இறைவனை வேண்டுதல் நூல் வெளியீட்டு வாழ்த்துரையில் அடங்கும்.
 
  2. வாழ்த்துரை வழங்கத் தக்கவர; யாவர;? 
 
சான்றோர;. சான்றோர; என்பவர; ஒழுக்கத்தில் உயர;ந்த அறிஞர;; மற்றவர; பார;த்துப் பின்பற்றுவதற்குச்; சான்றாக(உதாரணமாக) விளங்குபவர;; பு+சு நீறுபோல் உள்ளும் புனிதர;களாக உள்ளவர;.
 
ஒரு நூல் வெளியீட்டில் வாழ்த்துரை வழங்கத் தக்கவர; நூலாசிரியரது குரு, மாணவர;, உற்ற நண்பர; போன்றவராக இருத்தல் மரபு. இல்லையெனில் நூல் வெளியீட்டுத்துறையில் அனுபவம் மிக்க ஒருவரையோ, சிறந்த எழுத்தாளர; ஒருவரையோ, நூலகர; ஒருவரையோ தெரிவுசெய்யலாம். இவர;களும் நூலாசிரியர; வளர;ச்சியில் அக்கறை உள்ளவராயிருத்தல் வேண்டும்.
 
3. வாழ்த்துரை வழங்கும் முறை
 
வாழ்த்துரை எவ்விதம் வழங்கப்பெறல் வேண்டும் என்பதற்கு வரைவிலக்கணம்  எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயின் இலக்கியங்களில் வாழ்த்துச் செய்யுள்கள் ஏராளம் இடம்பெற்றறிருக்கின்றன. அவை எமக்குப் புகட்டும் வழிமுறைகளை இக்காலத்துக்கேற்ற சில மாற்றங்களுடன் நாம் பின்பற்றலாம். 
 
ஒரு நூல் வெளியீட்டில் வாழ்த்துரைக்கு முதன்மையானவர; நூலாசிரியரே. 
எனினும் அவரது குடும்பம், நூலை வெளியிட உதவியவர;, நூல் வெளியீட்டுக்கு வருகை தந்திருப்பவர; ஆகியோரும் வாழ்த்துக்கு உரியவரேயாவர;. 
 
வாழ்த்துரைகளில் நூலாசிரியரின் ஆற்றல்பற்றிக் குறிப்பிடலாம். அவரது நூல் பற்றியும் சில கருத்துக்களைத் தெரிவிக்கலாம். எனினும் வாழ்த்துரைகள் அறிமுகவுரைகளாகவோ ஆய்வுரைகளாகவோ மாறுதல் கூடாது. 
 
வாழ்த்துரைகளில் இனிய சொற்களே பயன்படுத்தப்படுதல் வேண்டும். கனியிருப்பக் காய்கவர;தல் தகாது. எக்காரணம்பற்றியும் எவரது மனத்தையும் புண்படுத்தவல்ல கருத்துக்களையோ சொற்களையோ வாழ்த்துரையில் கூறுதல் நல்லதல்ல. 
 
முடிவில் நூல் எந்தத் துறை சார;ந்ததோ அந்தத் துறைக்கு அணியாக அது விளங்கவும் நூலாசிரியரின் எழுத்துப்பணி சிறப்புறத் தொடரவும் அவரது எழுத்துப் பணிக்கு ஆதரவு நல்கிவரும் வாசகர; மற்றும் புரவலர; ஆகியோருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்து உரையை நிறைவு செய்யலாம்.
 
4. நேர அளவு
 
வாழ்த்துரைக்கு அளவுக் கணக்கு இல்லை. அவ்வைப் பிராட்டியார; ஒரு சொல்லால் சோழனை வாழ்த்திய நிகழ்வு ஒன்று செவிவழி இன்றும் வழங்கப்பட்டு வருகின்றது. அந்தச் சொல் ’வரப்புயர’ என்பது. அமைச்சர; எழுந்து அதற்கு விளக்கம் கேட்டபொழுது,
 
         வரப்புயர நீர; உயரும்
         நீர; உயர நெல் உயரும்
         நெல் உயரக் குடி உயரும்
         குடி உயரக் கோன் உயர;வான் 
 
என்று விரித்துக் கூறினார;. விரிவும் சுருக்கமாகவே இருப்பதைக் கவனித்தல் வேண்டும். இதற்கு மாறாக, பெருஞ்சித்திரனார; என்ற புலவர; குமணனை 28 அடிகள் கொண்ட பாடலால் வாழ்த்தியிருப்பதையும் பார;க்கிறோம். 
 
எனினும் நேரத்தை முக்கியமாகக் கொள்ளும் கனடாவில் வாழ்த்துரைக்கு நாகரிகமான நேர அளவு 5 நிமிடமே. அதற்கும் அதிகமாக விழாத் தலைவரோ நூலாசிரியரோ நேரம் வழங்கியிருப்பின் அதற்கேற்ப உரையைத் தயாரிக்கலாம். 
 
வாழ்த்துரைதானே பார;க்கலாம் என்கின்ற துணிவு பல பேச்சாளருக்கு இருப்பதுண்டு. அந்தத் துணிவில் அரங்கில் நின்று அலட்டுவதும் உண்டு. உரை அளவாகவும் இறுக்கமாகவும் இருந்தாலே கவர;ச்சியாக இருக்கும். அதற்குச் சற்றுத் திட்டமிடுதல் வேண்டும்.
 
5. வாழ்த்தால் ஆகும் பயன்கள்
 
’வாயே வாழ்த்து கண்டாய்’ என்றார; அப்பர; பெருமான். வாழ்த்தும் வாய் பலனை எதிர;பார;த்து வாழ்த்துவதில்லை. கருமத்தைச் செய் பலனை எதிர;பாராதே என்பது கீதோபதேசம். 
 
எனினும் தனது வாழ்த்துப் பலிக்க வேண்டும் என்னும் நல்லெண்ணம் வாழ்த்துபவருக்கு இருத்தல் வேண்டும். உள்ளொன்று வைத்துப் பறம் ஒன்று கூறுவது வாழ்த்துரையன்று. ஒலிக்குச் சக்தியுண்டு. சொற்களுடன் மனத்தையும் கலந்து உச்சரிக்கையில் அவை வலுவடைகின்றன. மந்திரங்களுக்கும் அவ்விதமே சக்தியு+ட்டப்படுகின்றது.
 
வாழ்த்துப் பெறுகின்றவரும் வாழ்த்தினைக் கூர;ந்து கவனித்து அதனை உள்வாங்குதல் வேண்டும். எறிகின்ற பந்து ஒன்றை கையாற் பிடிப்பதைப் போன்று பேசுகின்ற வாழ்த்துச் சொற்களை உரியவர; உள்வாங்கி அவைக்கேற்ப வாழமுற்படுதல் வேண்டும். இராமாயாணம், பாரதம் ஆகிய இதிகாசங்கள் பெரியவர;களின் வாழ்த்துரைகள் வலுவானவை என்பதை வலியுறுத்துவதைக் காண்கின்றோம். 
 
கனடாவில் வாழ்த்துரையை, அதற்குரியவர; கவனித்துக் கேளாது இருப்பதையும் நான் பல விழாக்களிற்; கவனித்திருக்கிறேன்.  
 
               -------------------------------- 
 

 

Expressing Best Wishes/Saying a Blessing

at a Book Launching Ceremony

 

(This is a summary of speech delivered to the members of the Toronto Tamil Sangam on 25.10.2014, Saturday.)

 

Expressing best wishes(Vaazhthurai) and saying a blessing(Aasiyurai) are both the same except that in the latter speech attempt is made to invoke God’s help and protection. In Canada a tradition has been evolving in that the former is given to non-Bramins and the latter is reserved for the Bramins.

 

Best-wish speeches are of many kinds. I have been asked to speak about making a best-wish speech at a book-launching ceremony which I believe is very useful both to speakers and to the audience. It is good to have a clear understanding about stage speeches.

 

But one must understand that there is no clear-cut definition about such speeches. I, Therefore, venture to explain the given topic based on my knowledge and experience.

 

The plan of my speech shall encompass the following:

 

  1. What is a best-wish speech,
  2. Who are entitled to make it,
  3. How should it be presented,
  4. How long should it last and finally
  5. The benefits of delivering such a best-wish speech.

 

I shall try my best to do justice to this plan within the given 20 minutes.

 

1. What is a best-wish speech?

 

It is a speech expressing a desire or hope with respect to the happiness, fortune, etc. of a person. At a book-launching ceremony the speaker will wish the author success in his writing career and his book to have many more editions. He/She may also wish for the success of the launching ceremony.

 

     2. Who can make such a speech?

 

Any learned lady or gentleman who are well respected by the society for their good conduct and service to humanity could be invited to make such a speech.

 

Tamil tradition gives preference to the author’s Guru or his disciple to make well -wishing speeches. The author could also invite one of his friends or any other person involved in printing and publication business for the purpose of expressing best wishes. A well-known writer or a librarian could also ably do the job.

 

   3. How to deliver a speech of best wishes

 

I don’t think there is any definition to the art of delivering a speech of best wishes. But they’re many poems hailing kings and heroes in our ancient literature. We could follow those ways with some changes to suit modern trends.

 

The chief person worthy of best wishes at a book launching is of course the author of the book. His family, the person who has helped him to bring out his writing in book form and the audience who have assembled to support him could also be included in the speech.

 

Author’s talents must be recognized in the speech of best wishes. The speaker can also wish his new book to enjoy many re-prints. But the speech must not turn into either an introduction or a book-review.

 

Best wishes must be expressed in decent language. It is not proper to make critical comments. Offensive words must also be avoided. The speaker can conclude by wishing the author continued success in literary world and praise all those who have gathered to support him.  

 

     4. Length of Speech

 

The normal time for expressing best wishes at a book launching function is 5 minutes. If more time is given either by the author or by the presiding person, the speaker is obliged to finish his speech within the given time.

 

Some speakers don’t seem to take vaazhthurai seriously and as a result they not only fumble for words to express their ideas but also exceed the time given to the annoyance of audience.

 

Vaazhthurai needs some planning to present it attractively with confidence. It has to be short and sweet. One has to do some preparation to deliver a serious and meaningful Vaazhthurai.

 

     5. The benefits of Vaazhthurai

 

It is said in Geetha that one should perform his/her duty without expecting any reward. The Vaazhthurai speaker doesn’t expect to get any reward. But he will certainly wish his speech be beneficial to those whom he things should do well in life.

 

A Vaazhthurai is more or less a subjective presentation. Every action has a reaction. When the speaker’s mind plays a serious role along with the tongue, there is bound to be some reaction. Words produce sounds and sounds have power. Intentional words are bound to rebound with functional benefits.

 

I have often observed that people to whom the wishes are intended don’t even listen. It is important that they listen to the Vaazhthurai and understand the speakers mind. Only then his words would materialize.  Epics such as Ramayana and Maha Bharatha teach us the importance of seeking and receiving the blessings from venerable elders and rishis.

               --------------------------------