ரொறன்ரோ தமிழ்ச் சங்கம்

நோக்குகளும் இயங்குநிலைகளும்
 
ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் என்பது அரசியல், சமயம் மற்றும் பிரதேசம் ஆகிய
சார்புகள் அற்றதும், இலாபநோக்கம் அற்றதுமான சமூக நிறுவனமாகும். இது
தமிழியல் சார்ந்த பல்வேறு பொருண்மைகளை அணுகுவதற்கும், ஆராய்வதற்கும்,
அறிவதற்கும், பகிர்வதற்கும், உரையாடுவதற்குமான ஒரு ஆரோக்கியமான
தளத்தை வழங்கிச் செயற்படுகின்றது. இதன் செயற்பாடுகள் பின்வரும்
நோக்கங்களை மையமாகக் கொண்டவை.
 
1. தமிழ் இலக்கிய, இலக்கண ஆக்கங்களையும், தமிழரின் படைப்புகளான பிறமொழிசார்
இலக்கியங்களையும் திறனாய்வுக்கு உட்படுத்தல்.
 
2. ஆய்வுரைகளிலும், கலந்துரையாடல்களிலும் கலந்துகொள்ளும் படைப்பாளிகள்,
இலக்கியவாதிகள், கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் பல்வேறு பட்ட
கோட்பாடுகளையும், கருத்துக்களையும், நோக்கங்களயும் சார்ந்திருந்தாலும், அவற்றைக்
கனம் பண்ணும் அதேவேளை அவற்றின் யாதொரு பக்கமும் சாராதிருந்து
படைப்புகளையும், படைப்பாளிகளையும் அணுகுவதற்கும், அறிவதற்கும், ஆராய்வதற்கும்,
விமர்சிப்பதற்குமான தளம் வழங்கல்.
 
3. இந்த வகையில் தமிழ் இலக்கியங்களை பழந்தமிழ் இலக்கியங்கள், சமய இலக்கியங்கள்,
மற்றும் நவீன இலக்கியங்கள் ஆகிய மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தி அவற்றை
ஆராய்வதற்கும், விமர்சிப்பதற்கும் சம இடம் அளித்தல்.
 
4. தமிழரின் கலைகள், மெய்யியற் சிந்தனைகள், வாழ்வியல் முறைகள், பழக்கவழக்கங்கள்
முதலான பண்பாட்டுக்கூறுகள் தொடர்பான பொருண்மைகளில் ஆய்வுகள் மற்றும்
கலந்துரையாடல்கள் நிகழ்த்தல்.
 
5. தமிழ் இலக்கியவாதிகள், கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோர் மத்தியில்
காணப்படும் ஆளுமையம்சங்கள் வெளிப்படுத்தப்படுவதற்கும், வளப்படுத்தப்படுவதற்கும்
வாய்ப்பளித்தல்
 
6. வளரும் கலைஞர்கள், படைப்பாளிகள் மற்றும் சிந்தனையாளர்களின் ஆற்றல்களையும்,
ஆக்கத்திறமைகளையும் இனங்கண்டு அறிமுகப்படுத்தல்; அவற்றின் வளர்ச்சிக்கும்,
செழுமைக்கும், பக்குவத்துக்கும், பக்கத் துணையாகவும் உந்து சக்தியாகவும் இருத்தல்;
அவை மனிதநேயம் மற்றும் சமூகநோக்கு ஆகிய உயரிய தமிழ் மரபு
மையப்படுத்தியனவாக அமையும் வகையில் அவர்களை ஆற்றுப்படுத்தல்.
 
7. ஆய்வுரைகளும் கலந்துரையாடல்களும் உண்மைகாணல் என்பதான உயரிய
குறிக்கோளை முன்வைத்தே நடாத்தப்படுவன. இவ்வகையில் ஆக்கபூர்வமான விமர்சன
மரபைப் பேணும் அதேவெளை குறுகிய குழு மனப்பாங்கு, கொச்சைப்படுத்தல், தனிநபர்
புகழ்ச்சி, சுயவிளம்பரம், நபர் அல்லது கோட்பாடு சார்ந்த கண்மூடித்தனமான எதிர்ப்பு
அல்லது ஆதரவு போன்ற இலக்கியத்தையும், படைப்பாளிகளையும், அவற்றின்
விழுமியங்களையும் கொச்சைப்படுத்தும் இழிவான அறஞ்சாரா நடைமுறைகள் சங்கத்தின்
செயற்பாடுகளிலும் ஆய்வரங்குகளிலும் தவிர்த்து ஒதுக்கப்படும்.
 
8. குரோதத்தை, அகந்தையை, காழ்ப்புணர்வை, இசங்களின் சார்பை விட்டொழித்ததாகவும்,
அன்பு, பாசம், மனிதநேயம், சமுதாய உணர்வு என்னும் மகத்தான பண்புகளைக்
கட்டியெழுப்புவதாகவும் உள்ள ஆக்கபூர்வமான விமர்சன மரபைப் பேணலும்,
வளர்த்தலும்.
 
9. ஆய்வுரை நிகழ்வுகளும், கலந்துரையாடல்களும் ’ஒலி-ஒளி’ப்பதிவுகளாக
ஆவணப்படுத்தப்பட்டு, மின்வலைத்தளங்களிலும், www.torontotamilsangam.org.
என்னும் எமது இணையத்தளத்திலும் பகிரப்படுகின்றபோதிலும், தரத்தையும்,
நேரத்தையும், கட்டுப்பாட்டுடன் பேணும் நோக்கில் ஆய்வுப்பொருண்மைகளைக்
கட்டுரைகளாக எழுத்துவடிவில் சமர்ப்பிக்குமாறு ஆய்வாளர்கள்
உக்குவிக்கப்படுகின்றனர்.
 

Toronto Tamil Sangam

Mission and Vision
Toronto Tamil Sangam is a non- profit social organization commited to providing
a neutral healthy environment without any social, political, religious, regional or
individual affiliations for the multifaceted approach, analysis, research and
knowledge-sharing in Tamilology.
 
Its objectives and activities are:
 
1. Critical approach, analysis and research of Tamil literature and literature by
Tamils in other languages constructively.
 
2. Toronto Tamil Sangam acknowledges and respects member participants'
individual affiliations with different schools of thoughts, ideologies and
aspirations without taking sides while providing them a forum for presentations
and discussions in a healthy nurturing environment.
 
3. Toronto Tamil Sangam provides a balanced approach and a fair and equal
chance for Classical Tamil works, Modern Tamil works and Divine Tamil
works in our activities.
 
4. Toronto Tamil Sangam is committed to research, presentations, meetings and
discussions on the fields of arts, philosophy, lifestyle, tradition etc. relevant to
Tamils and Tamil culture.
 
5. Toronto Tamil Sangam provides opportunities for the expansion, expression
and sharing of the talents and resources of our Tamil artists, writers and
educationists.
 
6. Toronto Tamil Sangam supports and guides budding Tamil artists, writers and
educationists in their constructive contributions towards the progressive
betterment of the human and social values of love, equality and freedom based
on our Tamil roots.
 
7. Toronto Tamil Sangam is truthfully committed to its high values as such it
vehemently rejects and opposes immoral narrow minded group mentality,
criticism with hatred, blind rejection based on ideologies, siding with and
vetting blindly to one or other ideology, personal glorification and gratification,
self-trumpeting and self- promotion, and the use of obscene degrading
language.
 
8. Toronto Tamil Sangam supports the tradition of constructive criticism based on
love, care, sincerity, social responsibility devoid of hatred, egoism, and
patriotism.
 
9. Toronto Tamil Sangam is commited to strict time management and high
standard as such speakers are encouraged to prepare and present their talks in
written format. We also updates the presentations and discussions in the
electronic media and in our website www.torontotamilsangam.org.

 

 

துரந்தை தமிழ்ச் சங்கப் பண்

கவிநாயகர் வி. கந்தவனம்
வாழிய துரந்தை தமிழ்ச்சங்கம் வாழி 
வாழிய வாழியவே! 
ஊழியை வென்று உலவிடும் தமிழில் 
ஊன்றியே வாழியவே! 
 
தமிழ்மொழி யதனின் தொன்மை பெருமை 
தழைத்திட வரும்பணிகள் 
கமழ்புகழ் கனடா நாட்டினில் ஆற்றிக் 
களிப்புற வாழியவே!   (வாழிய துரந்தை தமிழ்ச் சங்கம் வாழி…)
 
மேன்மைகொள் கனடியத் தமிழர் தங்கள் 
வேர்களை விழுதுகளைப் 
பான்மையில் அறிந்து பக்குவம் அடையும் 
பணிகளை ஆற்றுகவே!        (வாழிய துரந்தை தமிழ்ச் சங்கம் வாழி…)
 
தமிழர் வாழ்க்கைப் பண்பாட்டைப் பேணித் 
தாங்குதல் தலைக்கடனே! 
அமையும் அமைதி ஆன்மிக வாழ்க்கை யாவுக்கும் தமிழ் முதலே!      (வாழிய துரந்தை தமிழ்ச் சங்கம் வாழி…)