திருப்புகழ்ப்பாடல்களின்இசையமைதி - பேராசிரியர் சு.பசுபதி
   
   
   

திருப்புகழ்ப்பாடல்களின்இசையமைதி

பேராசிரியர் சு.பசுபதி

29-11-2014

1. அறிமுகம்

”இசைத்தமிழ்ப் பாடல் வடிவங்கள் - வரலாறும் வளர்ச்சியும்”என்றஇன்றையஅரங்கின்கோணத்தில்பார்க்கும்போது, தேவாரஇசைப்பாடல்களுக்குப்பின்தோன்றியமிகப்பெரும்இசைஇலக்கியம்திருப்புகழ்என்றுகூறலாம். 15-ஆம்நூற்றாண்டில்தோன்றியஅருணகிரிநாதர்இயற்றியவைஅவை.உண்மையில்அவர்இயற்றியபாடல்களைநவமணிகள்என்றஒன்பதுவகைகளுக்குள்அடக்கலாம்: அவை: திருப்புகழ், கந்தர்அனுபூதி, கந்தர்அலங்காரம், கந்தர்அந்தாதி, வேல், மயில், சேவல்விருத்தங்கள். திருவகுப்பு, திருவெழுகூற்றிருக்கை. அவற்றுள்திருப்புகழ்என்பதுஒருவகையேஆயினும், அருணகிரியின்எல்லாப்பாடல்களையுமே‘திருப்புகழ்’ என்றுஅழைக்கும்வழக்கம்பலரிடையேஉள்ளது. மேலும், அவருடையபாடல்களைமுன்னுதாரணங்களாகவைத்து, பின்னர்தோன்றியபலர்‘திருப்புகழ்’ என்றபெயரில்பலவண்ணப்பாடல்களைஇயற்றினாலும், பொதுவாகத்‘திருப்புகழ்’ என்றாலேபலரும்அருணகிரியின்ஒப்பில்லாப்பாடல்களையேநினைப்பர்.

அருணகிரியாரின்திருப்புகழின்இசையமைதியைப்பற்றியசிலபொதுக்கருத்துகள்இத்தகையயாப்பில்இயற்றப்பட்டமற்றதிருப்புகழ்வகைப்பாடல்களுக்கும்பொருந்தும்.மற்றசிலதிருப்புகழ்வகைப்பாடல்களுக்குச்சிலகாட்டுகள்: மாம்பழக்கவிச்சிங்கநாவலர், வண்ணச்சரபம்தண்டபாணிசுவாமிகள், பாம்பன்சுவாமிகள்,பாலபாரதி,காசிம்புலவர், குரவைஇராமானுஜதாசர், சாதுராம்சுவாமிகள்போன்றோரின்வண்ணப்பாடல்கள்,

2. சந்தமும், வண்ணமும்

பொதுவாக, இசைப்பாடல்களில்: பண், தாளம் என்றஇரண்டுபகுதிகள்உண்டு. திருப்புகழ்ப்பாடல்கள்தமிழில்சந்தப்பாடல்களுக்கும், அதனால்தாளஇசைக்கும்மூலஇலக்கணமாகவும், இலக்கியமாகவும்திகழ்கின்றன. சந்தப்பாடல்கள்சிலப்பதிகாரக்காலம்தொடங்கி, சம்பந்தர், பட்டினத்தார்போன்றவர்களிடமும்அங்கங்கேகாணப்பட்டாலும், அருணகிரிநாதர்தன்திருப்புகழ்மூலம்ஒருபுதியபரந்தஆழம்மிக்கஇசைப்பாடல்வகையைத்தோற்றுவித்தார். இவைசந்தக்குழிப்புக்கேற்றபடிஇயற்றப்பட்டபாடல்கள். ( அடிப்படைச்சந்தங்கள்: தந்த, தாந்த, தத்த, தாத்த, தய்ய, தன்ன, தன, தான. இந்தஎட்டின்நீட்சிகள்இன்னொருஎட்டு. ஆகமொத்தம்16)

ஒருசான்றுமூலம்பார்க்கலாம்:

முத்தைத்தருபத்தித்திருநகைஅத்திக்கிறைசத்திச்சரவண

முத்திக்கொருவித்துக்குருபர             --                எனவோதும்

இதன்சந்தக்குழிப்பு:

தத்தத்தனதத்தத்தனதனதத்தத்தன  தத்தத் தனதன 

தத்தத்தன  தத்தத் தனதன  தனதான

கடையில்வரும்’தனதான’ (‘எனவோதும்’, இதுபோலவேமற்றபாடல்களில்‘தம்பிரானே’ பெருமாளே’ ’வெகுகோடி’ போன்றவை) தொங்கல்எனப்படும்.இத்தகைய‘தொங்கல்’ உள்ளசந்தப்பாடலுக்குஅருணகிரிபுத்துயிர்கொடுத்தார்எனலாம்.. திருப்புகழைச்சந்தப்பாடல்என்றுசொல்வதைவிட‘வண்ண’ப்பாடல்என்றுசொல்வதுபொருத்தம். வண்ணப்பாடல்கள்யாவும்சந்தப்பாடல்களே; ஆனால்எல்லாச்சந்தப்பாடல்களும்வண்ணப்பாடல்கள்ஆகா. உதாரணமாக, ‘தத்த’ ‘தந்த’, தய்யமூன்றுமேஒரேசந்தம்தான்; ஆனால், வண்ணத்தில்வல்லின, மெல்லின, இடையினஒற்றுகளால்வேறுபடுகின்றன. இத்தகையதமிழின்மூவினவேறுபாடுகளைக்காட்டும்வண்ணப்பாடல்கள்தமிழுக்கேஉரித்தான, உலகஇசையிலேயேகாணமுடியாததாளப்பொக்கிடம்எனலாம்.

சந்தக்குழிப்பால்பாடல்களுக்குவிளைந்தஒருநன்மை:

பாடலுக்குஓர்ஒழுங்கானஅமைப்பும்,  கம்பீரம்நிறைந்தஓசைஇன்பமும். இதுஇசைஉலகிற்குஒருகொடை.

 

திருப்புகழில்மும்மை அலகு (திஸ்ரம்) நான்மை (சதுரச்ரம்), ஐம்மை (கண்டம்), எழுமை (மிச்ரம்), ஒன்பான்மை (சங்கீர்ணம்) என்ற ஐந்துஅடிப்படைஅக்ஷர வகைகளுக்கு எடுத்துக் காட்டான பலபாடல்கள்  உள.

1) திஸ்ர(மும்மை)  நடை.  'தனன தனன'

”தமரு மமரு மனையு மினிய தனமு மரசும் அயலாகத்”

2) சதுரஸ்ர ( நான்மை) நடை. 'தனதன தனதன'

” நிறைமதி முகமெனு மொளியாலே ”

3) கண்ட(ஐம்மை)நடை: 'தனாதன தனாதன'

” நிராமய புராதன பராபர வராம்ருத நிராகுல சிராதிகப் பிரபையாகி ”

4) மிஸ்ர ( எழுமை) நடை. 'தனதன தான' .

”அகரமு மாகி அதிபனு மாகி அதிகமு மாகி அகமாகி ”

5) சங்கீர்ண ( ஒன்பான்மை) நடை. 'தானாத் தனதான'

”தீராப் பிணிதீர சீவாத் துமஞான ”

கலப்புச் சந்தத்திற்கு ஒரு காட்டு:

(திஸ்ரம்+ சதுரஸ்ரம்+கண்டம்) என்ற அமைப்பு.'தத்த தானா தனாதன' .

”சத்தி பாணீ நமோநம முத்தி ஞானீ நமோநம தத்வ வாதீ நமோநம விந்துநாத”

( கண்டம் + சதுரஸ்ரம் + திஸ்ரம்) என்ற அமைப்பு:

‘தத்தனத் தாத்தத் தாத்த தனதான ‘

”புத்தகத் தேட்டிற் றீட்டி முடியாது“

சந்தக்கலவைஉள்ளபாடல்களையும்அருணகிரிஇயற்றியுள்ளார். ( திருப்புகழ்ப்பாடல்களின்தாளவகைகள்800 –க்கும்மேற்பட்டவைஎன்றுஆய்வாளர்கள்சொல்கின்றனர்.

3. தாளக்குறிப்புகள்

தெலுங்குமொழியில்பலஇசைப்பாடல்கள்இயற்றியஅன்னமாசாரியரும், கன்னடமொழியில்பலபாடல்கள்இயற்றியபுரந்தரதாசரும்அருணகிரியின்சமகாலத்தவர்கள்என்றேகூறலாம். அப்போதுதுருவம், மட்டியம், ரூபகம், ஜம்பை, திரிபுட, அட, ஏகம்என்னும்ஏழுதாளங்கள்வழக்கில்வந்திருந்தன.

இவற்றிற்குமுன்னர்இருந்தசச்சபுட, சாசபுடம்போன்றபலதாளங்களைப்பற்றிஅருணகிரிநாதர்தம்“பூதவேதாள”வகுப்பில்சொல்கிறார்:

”கைச்சதியி னாமுறைவி தித்தவா முற்கடித

    சச்சபுட சாசபுட சட்பிதா புத்திரிக 

கண்டச் சம்பதிப் பேத மாம்பல

    கஞ்சப் பஞ்சகத் தாள மாம்படி

கற்சரி யுற்சவ தர்ப்பண லக்ஷண

    சச்சரி மட்டிசை யொற்றிய றுப்பன ”

 

4. இராகவகைகள்

பூதவேதாளவகுப்பில்அவர்காலத்தில்இருந்தபலராகங்களையும்குறிப்பிடுகிறார்அருணகிரி.

“ காலமா றாத வராளிசி கண்டிகை

    பாலசீ காமர மானவி பஞ்சிகை

கவுட பயிரவி லளிதை கயிசிகை

    கவுளி மலகரி பவுளி யிசைவன 

கனவ ராடிய ரும்பட மஞ்சரி

    தனத னாசிவி தம்படு பஞ்சமி 

. . .  // . . 

கஞ்சக் கஞ்சநற் றேசி ராஞ்சிகு

    றிஞ்சிப் பண்

மற்றசிலபாடல்களில்இந்தளம், சாதாரி, தேசி, நாமக்ரியை, கவுடிபோன்றபண்களைக்குறிப்பிடுகிறார்.

 

5. இசையமைதி

திருப்புகழ்ப்பாடல்களில்சந்தக்குழிப்புகள்தரப்பட்டிருக்கும்; அதனால், அவற்றின்தாளஅமைப்புநமக்குத்தெரிகிறது. ஆனால்பாடலின்பண்அல்லதுராகம்குறிக்கப்படவில்லை. அந்தமூலராகங்கள்எவைஎன்பதைஐயமின்றிச்சொல்லமுடியவில்லை. ஆனால், “நாதவிந்துகலாதீ”, “அபகாரநிந்தை” போன்றபாடல்கள்நெடுங்காலமாய்ஒரேமுறையில்பாடப்பட்டுவருவதால், சிலதிருப்புகழ்ப்பாடல்களின்ராகங்கள்இன்றுவரைமாறாமல்உள்ளனஎன்றுசொல்லலாம். மற்றபடிதிருப்புகழுக்குப்புதியமுறையில்ராகங்களைஅமைத்துப்பலர்பாடிவருகின்றனர். இவர்களில்முன்னோடிகள்; வள்ளிமலைச்சச்சிதானந்தசுவாமிகள்(1870- 1950), காஞ்சிபுரம்நாயனாப்பிள்ளை.(1888 --1934)

நாயனாப்பிள்ளைபாடியமுறையில்சித்தூர்சுப்பிரமணியப்பிள்ளை, டி.கே.பட்டம்மாள்போன்றோர்பாடிவந்துள்ளனர். திருப்புகழ்ப்பாடல்களைமட்டும்முழுநேரக்கச்சேரியாய்பாடியவர்களும்உண்டு. ஆலத்தூர்சகோதரர்கள், டி.என்.சேஷகோபாலன், விஜயசிவாபோன்றோர்ராகஆலாபனை, நெரவல், சுரங்கள்போன்றவற்றைத்தக்கமுறையில்சேர்த்துச்செவ்விசையாய்வழங்கியுள்ளனர். மேலும், திருப்புகழின்தனித்தன்மையுள்ளசந்தக்குழிப்பால், பலதிருப்புகழின்அடிகள்ராகம், தானம், பல்லவிஎன்றகச்சேரியின்ஓர்அங்கமானபல்லவியைப்புதியதாளத்தில்அமைக்கமிகப்பொருத்தமாகஇருப்பதையும்நாம்பார்க்கிறோம். உதாரணம்: “ அபகாரநிந்தைபட்டுழலாதே” , “ காதிமோதிவாதாடுவார்“ போன்றதிருப்புகழ்வரிகள்இசைமேடைகளில்ராகம்--.தானம்-பல்லவிஅமைப்பில்பாடப்பட்டுள்ளன.

மிருதங்கத்தில்மிகுந்ததேர்ச்சிஉள்ளவர்களேதிருப்புகழுக்குப்பக்கவாத்தியம்வாசிக்கவும், அந்தஅங்கதாளத்தில்லயக்கோர்வைகள்அமைத்தும், தனிஆவர்த்தனம்செய்யவும்துணிகிறார்கள்என்பதும்உண்மையே.மிருதங்கஅரங்கேற்றத்தில்ஒருதிருப்புகழைச்சேர்த்து, அத்திருப்புகழுக்குச்சரியாகஅங்கதாளத்தில்வாசித்து, பிறகுஅதேதாளத்தில்தனிஆவர்த்தனத்திலும்தன்திறமையைக்காட்டும்இளம்வித்வான்களைஇக்காலத்தில்பார்த்தல்அரிது.

பாடலின்சந்தத்தைமனத்தில்வைத்தும், குறில், நெடில், ஒற்றுமுதலியவற்றையும்கவனித்து, திருப்புகழுக்குப்பொருத்தமானராகங்களைஅமைத்தல்முக்கியம்என்றால்மிகையாகாது. தற்காலத்தில்500 பாடல்களுக்குமேல்100 –க்குமேற்பட்டராகங்கள்அமைத்து, திருப்புகழ்அன்பர்கள்என்றஅமைப்பின்மூலம்உலகெங்கும்திருப்புகழைப்பரப்பியவர்புதுடில்லியில்வாழ்ந்தகுருஜிஇராகவன்என்றபெரியார்.

6. முடிவுரை

அருணகிரிநாதரின்திருப்புகழ்ப்பாடல்கள்தமிழின்தனித்தன்மைஒளிரும்தாளப்பொக்கிடம். தற்காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பண்களில் இப்பாடல்கள்  விளங்குகின்றன. இவற்றைக்கற்றுப்பாடுவதால், இசைக்கலைஞரின்லயஞானம்… ஏன், தமிழறிவும்தான்– மேம்படும்என்பதைஐயமின்றிஅறியமுடிகிறது.

மேலும், காலத்திற்கேற்றகருத்துகளில், இசைமேடைகளில்இன்றுகாணப்படாதபுதியதாளங்களில், புதியவடிவங்களில்திருப்புகழ்போன்றவண்ணப்பாடல்களைஇயற்றுவதின்மூலம்புதுமையானபலதமிழிசைப்பாடல்களைநாம்இசையுலகிற்குஅளிக்கமுடியும்.உதாரணம்: இருபதாம்நூற்றாண்டில்வாழ்ந்தமாணிக்கவாசகம்பிள்ளைஎன்பவர்“திருப்புகழ்ச்சந்தக்கீர்த்தனை” என்றுஒன்றைஇயற்றியுள்ளார். பாடல்முழுதும்வண்ணத்தில்இல்லாவிடினும், சரணங்களில்வண்ணச்சீர்கள்வருகின்றன.

மேலும், வல்லினஒற்றுகளேஇல்லாததிருப்புகழ்ப்பாடல்கள்உள்ளன.  இதுதொல்காப்பியத்தில்வனப்புஅல்லதுஇழைபுஎன்றுசொல்லப்படும்அங்கத்தில்அடங்கும்ஓர்அழகு.

( “ஒற்றொடுபுணர்ந்தவல்லெழுத்தடுக்காது  “ என்றுதொடங்கும்தொல்காப்பியச்சூத்திரம்பார்க்கவும்) 

இவைசிலஇசைநடைகளுக்கு, எளிதாகஇருக்கும். 

காட்டு: ( ஹம்சாநந்திராகத்தில்பாடப்படும்திருப்புகழ்)

நிறைமதி முகமெனு ...... மொளியாலே

     நெறிவிழி கணையெனு ...... நிகராலே

உறவுகொள் மடவர்க ...... ளுறவாமோ

     உனதிரு வடியினி ...... யருள்வாயே

மறைபயி லரிதிரு ...... மருகோனே

     மருவல ரசுரர்கள் ...... குலகாலா

குறமகள் தனைமண ...... மருள்வோனே

     குருமலை மருவிய ...... பெருமாளே.

 

( மாசில்வீணையும்என்றுதொடங்கும்தேவாரத்திலும்வல்லினஒற்றுகள்இல்லைஎன்பதுகுறிப்பிடத்தக்கது. ) வல்லின, மெல்லின, இடையினங்கள்மேலோங்கும்திருப்புகழ்களும்( அவற்றைச்சரியாகஉச்சரித்துப்பாடினால்!) தமிழிசைக்குஒருபுதியபரிமாணம்சேர்க்கும்.

திருப்புகழ்காட்டும்வழியில்புதியவண்ணப்பாடல்களைஇயற்றிஇசைப்பதன்மூலம்தமிழிசையுலகில்ஓசைஇன்பமும், லயஞானமும்மிகுந்தபலபுதுமைகளைப்புகுத்தலாம்.ஆனால், சந்தக்குழிப்புக்குஏற்பப்பாடலைஇயற்றயாப்பிலக்கணஞானம்மிகஅவசியம்என்பதும்கசப்பானஉண்மை. மேலும்அத்தகையயாப்பிலக்கணஅறிவுள்ளோருக்குஇசைக்கனம்பொருந்தியஇசைப்பாடல்இயற்றத்தேவையானஇசைநுணுக்கங்கள்தெரியுமாஎன்பதுஐயமே. புதியசோதனைகள்செய்யமுடியாதவர்கள்அருணகிரியின்‘பழைய’ பாடல்களையாவதுசரியானஅங்கதாளத்தில்பாடமுன்வரலாம்.அவர்நமக்குவிட்டுச்சென்ற, உலகிலேயேஎங்கும்காணமுடியாததாளப்பொக்கிடத்திலிருந்துஒருதுளியையாவதுஒவ்வோர்இசைநிகழ்ச்சியிலும்அரங்கேற்றலாம்.  

=============