செம்மொழித்தமிழ்: வரலாறு, இயல்புகள், பயன்பாடு பேராசிரியர; அ. சண்முகதாஸ்,Ph.D
   
   
   
 
செம்மொழித்தமிழ்: வரலாறு, இயல்புகள், பயன்பாடு
 
பேராசிரியர; அ. சண்முகதாஸ்,Ph.D. (Edinburgh), D.Litt. (HC, UJ); நிறைவுநிலைப் பேராசிரியர;
        யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
 
 
 
வரலாறு
உலகமொழிகளில்  கிரேக்கமும் இலத்தீனுமே 19ஆம் நூற்hண்டுக்கு முன்னர; செம் மொழிகள் என அடையாளம் காணப்பட்டன.  அதன் பின்னரே ஏனைய செம்மொழிகள் பற்றி உலகம் அறிந்தது.  19ஆம் நூற்றாண்டளவில் மேலைத்தேய அறிஞர;களான மாக்ஸ் முல்லர;, வில்லியம் ஜோண்ஸ், வின்ரனிற்ஸ், கீத், மக்டொனால்டு போன்றவர;கள் சமஸ்கிருத மொழி பற்றியும் அம்மொழியிலமைந்த தொன்மையான இலக்கியங்கள் பற்றியும் ஆங்கிலத்திலும் ஜெர;மானிய மொழியிலும் எழுதினார;கள்.  அத்தொன்மை நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர;த்தும் வெளியிட்டனர;.  இதனால் சமஸ்கிருத மொழி ஒரு செம்மொழி என அடையாளம் காணும் நிலை ஏற்பட்டது.  வடமொழிக்குக் கிடைத்த இந்த வாய்ப்புத் தமிழ் மொழிக்கு அந்தக் காலத்திலே கிடைத்திருந்தால் தமிழ் எப்பொழுதோ செம்மொழி என அடையாளங் காணப்பட் டிருக்கும்.  எல்லிஸ், டாக்டர; ரொபேர;ட் கால்ட்வெல்ட் போன்றவர;களே முதலில் தமிழ் ஒரு திராவிடமொழி என்பதை நிறுவி அது ஒரு செம்மொழிக்குரிய தகைமைகளை உடையன என்பதை உலகறியவைத்தனர;.  இவர;களுடைய ஆய்வுகள் தந்த உண்மைகளை நோக்கிய பரிதிமாற் கலைஞர; போன்றவர;கள் தமிழ் ஒரு செம்மொழி என 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலே தெளிவாகக் கூறினர;.  பரிதிமாற்கலைஞர; தமிழ் மொழி வரலாறு (1887)என்னும் தன்னுடைய நூலிலே,
“வடமொழி, இலத்தீன், கிரீக்கு முதலியன போலத் தமிழ் மொழியும் ‘உயர;தனிச் செம்மொழி’யாமாறு சிறிது காட்டுவாம்.  தான் வழங்கும் நாட்டின்கணுள்ள பல 
மொழிகட்குமத் தலைமையும் அவற்றினும் மிக்க மேதகவுடைமையுள்ள மொழியே 
‘உயர; மொழி’.  இவ்விலக்கணத்தான் ஆராயுமிடத்துத் தமிழ், தெலுங்கு முதலிய
வற்றிற் கெல்லாந் தலைமையும் அவற்றினும் மிக்க மேதகவும் உடைமையால் தானும்
உயர; மொழியேயென்க.  தான் வழங்கும் நாட்டிற் பயிலும் மற்றைய மொழிகளின் உதவியின்றித் தனித்து இயங்க வல்ல ஆற்றல் சான்றதே ‘தனிமொழி’ எனப்படும்.
தான் பிறமொழிகட்குச் செய்யும் உதவி மிகுந்தும் அவை தனக்குச் செய்யும் உதவி 
குறைந்தும் இருத்தலே வழக்காறு.  தமிழ் மொழியினுதவி களையப்படின் தெலுங்கு 
முதலியன இயங்குதலொல்லா.  மற்றுந் தமிழ் மொழி அவற்றினுதவி யில்லாமலே
சிறிது மிடர;ப்பாடின்றித் தனித்து இனிமையின் இயங்க வல்லது.  இஃது இந்திய மொழிநூற் புலவர;கள் பலர;க்கும் ஒப்பமுடிந்தது.  இனிச் செம்மொழியாவது யாது? திருந்திய பண்புஞ் சீர;த்த நாகரிகமும், பொருந்திய தூய்மொழி புகல் ‘செம்மொழி’யாம் 
என்பது இலக்கணம்.  இம்மொழி நூலிலக்கணம் தமிழ் மொழியின்கண்ணும் அமைந்திருத்தல் தேற்றம்” 
என்று கூறியுள்ளார; . இவருக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னர; கால்டுவெல்ட் “ஊடயளளiஉயட வுயஅடை. றாiஉh ழெவ ழடெல உழவெயiளெ யடட வாந சநகiநெஅநவௌ றாiஉh வாந வுயஅடை hயள சநஉநiஎநனஇ டிரவ யடளழ நஒhiடிவைள வழ ளழஅந நஒவநவெ வாந pசiஅவைiஎந உழனெவைழைn ழக வாந டயபெரயபநஇ  னகைகநசள அழசந கசழஅ வாந உழடடழஙரயைட வுயஅடை வாயn வாந உடயளளiஉயட னயைடநஉவ ழக யலெ ழவாநச னுசயஎனையைn னைழைஅ னகைகநசள கசழஅ வைள ழசனiயெசல னயைடநஉவ.”  எனக் கூறினார;.  இக்சுற்றிலே மூன்று விடயங்களை நாம் விரிவாக நோக்கவேண்டும்:
1. ஊழவெயiளெ யடட வாந சநகiநெஅநவௌ:  திராவிட மொழிகளுள் ஒன்றான தமிழ் மொழி பிறமொழி எதிலும் தங்கியில்லாத தனித்துவமான நிலையை அடைந்தது.  அம்மாhழியின் இலக்கியச் சிறப்புக்கான அருமையான செம்மொழி இலக்கியங்களும் காவியங்களும் பக்தி இலக்கியங்களம் தேதன்றின்         .
2. நுஒhiடிவைள வாந pசiஅவைiஎந உழனெவைழைn ழக வாந டயபெரயபந: யுவெஙைரவைல ரூ ஊழவெiரெவைல:  தமிழ்ச் செம்மொழி மிகப் பழைய நிலையினை உடையதாக அமையும் அதே வேளை பிற்காலத்
திலும் மாற்றமுற்ற மொழியமைப்புடன் பண்டைய மொழிக் கூறுகளையும் உடையதாக 
அமைந்து வந்தது.
3. ஊடயளளiஉயட எள ஊழடடழஙரயைட:  செம்மொழிகள் சிலவற்றில் ‘இருவழக்குப் பண்பு’ இருந்தது. அப்பண்பே அம்மொழிகள் வழக்கற்றுப் போவதற்கக் காரணமாகவும் அமைந்தது. இலத்தீன் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை இவ்விடத்தில் குறிப்பிடலாம்.  இரு மொழிகளும் தேவ மொழிகளாக ஆகின.  பொதுமக்கள் அம்மொழிகளிலுpருந்து கிளைத்த மொழிகளைப் பயன்படுத்தினர;.  தேவமொழி - பொதுமக்கள் மொழி என்னும் இருவழக்குப் பண்பு இலத்தீன் மொழியும் சமஸ்கிருத மொழியும் இறந்த மொழிகளாக்கின.  ஆனால், தமிழ் மொழியில் ‘இருவழக்குப் பண்பு’ இருந்தபோதிலும் அது தமிழ் மொழியைச் சாகடிக்க வில்லை.
இந்திய மத்திய அரசு 12.10.2004 அன்று பிறப்பித்த அரசாணையால் தமிழ் செவ்வியல் மொழி என வகைப்படுத்தப்பட்டது.  இவ்வறிவிப்பில் நான்கு விடயங்கள் அடங்கியிருந்தன:
1. ‘செவ்வியல் மொழிகள்’ என ஒரு புதிய மொழிப் பகுப்பினை உருவாக்குவதென இந்திய அரசு முடிவுசெய்துள்ளது.
2. ‘செவ்வியல் மொழி’ என வகைப்படுத்தக் கருத்திற் கொள்ளப்படும் மொழிகளின் தகுதிப்பாட்டினை உறுதி செய்யப் பின்வரும் அளவைகள் பயன்படுத்தப்படும்:
(i) 1500 - 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட உயர; பழைமை வாய்ந்த அதன்  
   நூல்கள்  ஃ ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு
(ii) தலைமுறை தலைமுறையாக அதனைப் பேசுபவர;களால் மதிப்புயர;ந்த 
   பாரம்பரியச் சொத்து எனக் கருதப்படும் ஒரு தொகுதி பண்டைய 
   இலக்கியம் ஃ நூல்கள் 
(iii) இன்னொரு மொழி பேசும் மக்கட் குழுவிடமிருந்து கடன் பெற்றதாக 
   அல்லாமல் தொடக்கமுதலாக இருந்துவரும் இலக்கிய மரபு.
 
ஊடயளளiஉயட டுயபெரயபந என்னும் பதத்துக்கு அறிஞர;கள் பயன்படுத்திய சொற்றொடர;களை கீழே பட்டியலிட்டுத் தருகிறோம்:
வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார; ‘உயர;தனிச் செம்மொழி’
த.நி. நல்லப்பன் ‘உயர;தனிச்செம்மொழி’
தமிழண்ணல் ‘செவ்வியல்’
ஜான் சாமுவேல் ‘செந்நெறிஃசெம்மொழி’
ச. அகத்தியலிங்கம் ‘செவ்வியல்’
கா. அப்பாதுரை ‘தலைமைப்பண்பு இலக்கியம்’
சு. பாலச்சந்திரன் ‘செம்பொருளியல்’
ந. பிச்சமுத்து ‘முதன்மை மரபியல்’
இ. மறைமலை ‘செம்மொழி’
மலையமான் ‘செவ்வியல்’
‘ஊடயளளiஉயட டயபெரயபந’ என்னும் தொடருக்கு ‘செவ்வியல் மொழி’  என்று கூறுவதே பொருத்தமாகும்.  
நம்முடைய முன்னோர;கள் ‘செந்தமிழ்’ என்றே தமிழ் மொழியை வழங்கியுள்ளனர;. ‘ஊடயளளiஉயட வுயஅடை’ என்னும் தொடரைச் ‘செந்தமிழ்’ என்று வழங்குவது பொருத்தமாயிருக்கலாம். ஆனால் இச்சொற்றொடர; (‘கொடுந்தமிழ்’ என்று ஒன்று இருப்பதால்) ஒருவகைத் தமிழைக் குறிப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட மாநிலத்தைச் சேர;ந்ததாகவும் (பாண்டிநாடு அல்லது சோழ நாடு) தமிழ் இலக்கண நூலார; குறிப்பிடுவதால் இது பொருத்தமாகாது.  ‘ஊடயளளiஉயட’ என்னும் சொல்லைத் தமிழிலே ‘செவ்வியல்’ எனக் கூறுவதே பொருத்தமாகும்.  ‘செம்மை’யின் இன்னொரு வடிவமே ‘செவ்வி’.  இவ்விரு சொற்களுக்கும் வுயஅடை டுநஒiஉழn தரும் பல் வேறு பொருளை நோக்கினால் அவை ‘செம்மொழி’ என்னும் கருத்தினை அரண்செய்வனவாக அமைகின்றன.  ‘செம்மொழி’ என்னும் தொகைச்சொல் தற்போது பொதுவான பயன்பாட்டில் இருக்கின்றது. மொழி என்னும் சொல்லுடன் ‘செவ்வியல்’ சேரும்போது ‘செம்மொழி’ எனக் கூறலாம்.  ஆனால் இலக்கியம், ஓவியம், கட்டடக்கலை என்பவற்றுடன் முறையே ‘செவ்வியல் இலக்கியம்’, ‘செவ்வியல் ஓவியம்’, ‘செவ்வியல் கட்டடக்கலை’ என்று கூறுவதே பொருத்தமாயிருக்கும். 
 
பண்டைய நாகரிக, பண்பாட்டு வளர;ச்சிக்குப் பெரிதும் செம்மொழிகளே உதவியுள்ளன.  பண்டைய நாகரிகங்களின் இலக்கிய, தத்துவ பாரம்பரியங்களை இச்செம்மொழிகளே உருவாக்கியுள்ளன.  ஐரோப்பாவில் கிரேக்க, இலத்தீன், பாரசீக செம்மொழிகளும், ஆசிய-ஆபிரிக்காவில் சமஸ்கிருதம், அரபிக், ஹீபுறு, சீனம், தமிழ் ஆகிய செம்மொழிகளும் ஆக எட்டு மொழிகள் செம்மொழிகளாயின.  இவை நான்கு மொழிக்குடும்பங்களைச் சாரந்தன.  (1) இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பம் சார;ந்தன: கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம், பாரசிகம். (2) ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பம் சார;ந்தன: அரபிக், ஹீபுரு (3) திராவிடமொழிக் குடும்பம் சார;ந்தது: தமிழ் (4) சீனோ-திபேத்திய மொழிக் குடும்பம் சார;ந்தது: சீனம்.  இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எட்டு மொழிகளுள் அரபிக், பாரசிகம் தவிர;ந்த ஆறு மொழிகளே செம் மொழிகள் எனக் கருதுவோரும் உளர;.
தமிழ்ச் செம்மொழிக் காலம் எது?   முன்னர; குறிப்பிட்ட தமிழ் தவிர;ந்த  ஏழு மொழிகளி னுடைய செம்மொழிக் காலம் எது என்பதனைப் பினவருமாறு குறிப்பிடலாம்:
செம்மொழி ஹீபுரு: கி.மு. 7 - 6ஆம் நூற்றாண்டுகள்.
செம்மொழி கிரீக்: கி;.மு. 5 - 4ஆம் நூற்றாண்டுகள்
  செம்மொழி இலத்தீன்: கி.மு. 2 - 1 ஆம் நூற்றாண்டுகள
  செம்மொழி சமஸ்கிருதம் கி.மு. 5 - கி.பி. 10 வரை
  செம்மொழி சீனம் கி.மு. 7 - 2ஆம் நூற்றாண்டுகள்
  செம்மொழி அரபிக் கி.பி. 7ஆம் நூற்றாண்டு
செம்மொழி பாரசிகம் கி.பி. 3 - 7ஆம் நூற்றாண்டுகள்
எட்டாவது செம்மொழியாகிய தமிழின் செம்மொழிக் காலம் பற்றி இனிப் பார;க்கலாம்.  இந்திய அரசு தமிழ் மொழியைச் செம்மொழி என அறிவித்த பின்னர; தமிழ்ச் செம்மொழி மைய அறிஞர;கள் சங்க இலக்கியங்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார; களவியலுரை ஆகிய இலக்கியங்களே செவ்வியல் தமிழ் இலக்கியங்கள் எனக்கொள்ளுதற்குத் தீர;மானித்தனர;.  எனவே அவ்விலக்கியங்கள் தோன்றிய காலமே தமிழ்ச் செம்மொழிக் காலம் எனக் கொள்ளவேண்டியுள்ளது.  இதன்படி கி.மு. 5ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதி தமிழின் செம்மொழிக் காலமாகும்.  
அப்படியாயின் “பக்தியின் மொழி தமிழ்” எனக் கூறுதற்குக் காரணமான பக்திப்பாடல்கள், கம்பனுடைய இராமாயணம் சேக்கிழாருடைய பெரியபுராணம் போன்றன தோன்றிய காலங்கள் தமிழ்ச் செம்மொழிக் காலமாக அமையாதா என்னும் வினா எழுகின்றது.  இரண்டு பக்க மறுமொழிகள் உள: 
அமையும் என்பதற்குரிய வாதம்:
பிற செம்மொழிகளுடன் ஒப்பிட்டு நோக்கும்போது, சோழப் பேரரசின் வீழ்ச்சிக் காலம் வரையும் தமிழ் மொழியினுடைய செவ்வியற் காலம் என்று கொள்வதிலே தவறிருக்காது.  அதற்குரிய காரணங்களைப் பார;க்கலாம்:
 
1. தமிழ் மொழி கி.மு. 300 தொடக்கம் இன்று வரை இடையறாது, வழக்கிறந்து போகாது, வாழ்ந்தகொண்டிருக்கின்ற ஒரு மொழியாக அமைந்துள்ளது. இக்கால கட்டத்தில் கி.பி. 1300க்குப் பின்னரே தமிழ் இலக்கியம் ஒரு வகை நொய்தல் நிலையை அடைகின்றது.  இக்காலம் வரையும் செவ்வியற் பாங்கான புதிய தமிழ் இலக்கியங்கள் இடையறாது தோன்றி வளர;ந்துள்ளன.
 
2. கி.பி. 600க்கும் 900க்கும் இடைப்பட்ட காலத்திலேதான் தமிழ் மொழியின் செழுமையினையும் ஆன்மிக வழிபாட்டுக் கருத்துக்களையும் உலகுக்கு வழங்கிய பக்திப் பாடல்கள் தோன்றின.  டாக்டர; ஜி.யு. போப் திருவாசகப் பாடல்களை ஆங்கில மொழியிலே பெயர;த்து மேலைத் தேயத்தவர; அப்பாடல்களின் சமய, தத்துவக் கருத்துக்களை அறிய வைத்தார;. 
 
3. கி.பி. 900க்கும் 1300க்கும் அடைப்பட்ட காலம் தமிழருடைய அரசியல் வரலாற்றிலே ஒரு பொற்காலமாகும்.  அசோகச் சக்கரவர;த்தி காலத்திலே இந்தியப் பண்பாடு வெளிநாடுகளுக்குப் பரவியது போல சோழப் பேரரசினை அமைத்த இராஜராஜன், இராஜேந்திரன் போன்றோர; காலத்திலும் இந்தியப் பண்பாடு வெளிநாடுகளுக்கப் பரவியது. இந்திய இராமாயணப் பண்பாடு தென்கிழக்கு, தூரகிழக்கு நாடுகளிலே பரவுதற்குச் சோழப்பேரரசு காரணமாயிற்று.
தமிழ்நாட்டுக் கதைப்பொருளைக் கொண்ட சிலப்பதிகாரத்தின் பின்னர; தமிழ்நாட்டுச் சைவ அடியார;களின் வரலாற்றைப் பொருளாகக் கொண்ட பேரிலக்கியமாகிய சேக்கிழாருடைய பெரியபுராணம் இக்காலத்திலேயே இயற்றப்பட்டது.  சமணச் சீவகசிந்தாமணியும் வை‘;ணவக் கம்பராமாயணமும் இக்காலத்திலேயே தோன்றின. தழுவலாக அமைந்தபோதும் கம்பனுடைய இராமாயணம் தமிழ் ஒரு செம்மொழி என்பதை உலகுக்குப் பறைசாற்றுவதாக அமைகின்றது. 
 
அமையாது என்பதற்குரிய வாதம்:
செம்மொழி மையம் கூறிய காலத்தினுள் தோன்றிய நூல்களின் பொருள், வடிவம், மொழி ஆகியனவற்றை, கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர; தோன்றியனவற்றினுடன் ஒப்பிட்டு நோக்குமிடத்து முன்னையவற்றின் பல பண்புகள் மீண்டும் வருவதைக் காணலாம்.  பக்திப் பாடல்களின் மொழியை சங்கத்தமிழ் எனக் கூறுகின்றனர;. கம்பனும் சேக்கிழாரும் சங்க இலக்கியங்களுக்கும் பக்தி இலக்கியங்களுக்கும் கடமைப்பட்டுள்ளனர;. பிற்கால இலக்கியங்களில் பெருந்தொகையான வடமொழிச் சொற்கள் இடம்பெறுகின்றன.
 
இயல்புகள்
செம்மொழி என்பது பண்டையதாயமைய வேண்டும்;. அது இன்னொரு மரபிலிருந்து கிளைத்ததொன்றாக அமையாது, தானாகக் கிளைத்தெழுந்து தனித்த மரபுடையதாக அமையவேண்டும.;;  மிகவும் வளமான பெருந்தொகையான பண்டைய இலக்கியத் தொகுதியுடையதாக இருக்க வேண்டும்.  ஒரு மொழி செவ்வியல் மொழி என்று கூறுதற்கு அம்மொழியின் மொழியிலக்கண அமைப்புகள் மட்டுமல்லாமல் அதன் இலக்கியத்தையொட்டிய மதிப்பீடே முதன்மையாகக் கொள்ளப்படு கின்றது.  புசழடநைச யுஉயனநஅiஉ நுnஉலஉடழியநனயை வும் நுnஉலஉடழியநனயை டீசவையnniஉய வும் தரும் செம்மொழித் தகைமைகளுக்கான அளவைகளைப் பார;க்குமிடத்து ஒரு பத்து அளவைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளன. அவை வருமாறு:
1. தொன்மை
2. சமநிலை
3. தெளிவு
4. கட்டுப்பாடு
5. தூய்மை
6. உயர; இலட்சியம்
7. உலகப்பொதுமை
8. நியாயமுடைமை
9. ஒழுங்கு
10. மனிதாயம்
இவை எவ்வாறு செம்மொழித் தமிழிலே காணப்படுகின்றன என்பதைப் பார;க்கவேண்டும்.  இப்பத்து அளவைகளும் தமிழை ஒரு செம்மொழியாக நோக்குதற்கு உதவுகின்றனவா என்பதை விரிவாக நோக்கலாம்.
 
தொன்மை: 
தொன்மையான மொழியும் இலக்கியமும் செம்மொழிகளுக்குரியன.  தமிழ்ச் செம்மொழி இலக்கியங்களாகிய சங்க இலக்கியங்கள் மிகத் தொன்மை வாய்ந்தன.  சங்ககாலத்தினை நிச்சயிக்க ஜம்பைக் கல்வெட்டு; இன்றியமையாததொன்றாகும். இக்கல்வெட்டு கி.மு. 273இல் அரசேறிய அசோக சக்கரவர;த்தி தன்னுடைய அயலவர;கள் என சோழ, பாண்டிய, சேரர;களுடன் சத்தியபுத்த மன்னர;களையும் தன்னுடைய ஜம்பைக் கல்வெட்டு எனப்படும் சுழஉம நுனiஉவ இல் குறிப்பிட்டுள்ளான். சத்தியபுத்த மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சி எனக் கூறுவர;. இக்கல்வெட்டு  அசோகனுக்கும்  தமிழ்நாட்டுக்குமிடையே ஒரு புதிய இணைப்பை இனங்காட்டுகின்றது என ஆர;. நாகசுவாமி கூறுகின்றார;.    இதனைவிட பெருங்கற்பண்பாடு தொடர;பான விவரங்கள் சங்கப் பாடல்களின் காலத்தினை அறிந்துகொள்ள உதவும்.   ஒரு காலத்து இலக்கியம் அக்காலத்து மக்களுடைய வாழ்வினையும் நிகழ்வுகளையும் சித்திரிப்பது மட்டுமன்றி முற்கால மரபுகளையும் சித்திரிக்குமென்ற உண்மையினை ஏற்றுக்கொண்டோமெனில்,  சங்ககாலத்தில் நிலவிய மிக முன்னேற்றமடைந்த நாகரிக நிலை மிக முற்பட்ட காலத்திலே தோற்றம் பெற்றிருக்கவேண்டும் எனக் கொள்ளலாம்;.  சங்ககால நாகரிகத்துக்குக் காரணிகளான பெருங்கற் பண்பாடு, தாழிக்காட்டுப் பண்பாடு ஆகியவற்றின் தொடக்க காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. பெருங்கற் பண்பாடு தமிழகத்துக்கு கி.மு. 800 அளவில் வரத் தொடங்கியதெனவும், கி.மு.500 அளவில் தமிழகமெங்கும் பரவியதெனவும் தொல்லியல் அறிஞர; பேராசிரியர; டீ.மு. குருராஜராவ் வுhந ஆநபயடiவாiஉ ஊரடவரசந என்னும் தன் நூலிலே கூறியுள்ளார;.  இப்பெருங்கற் பண்பாட்டுக் கூறுகள் (கறுப்பு-சிவப்பு மட்பாண்டம், ஈமத்தாழி, இரும்புப் பயன்பாடு, தினையரிசிஃநெல்லரிசிப் பயன்பாடு, மலை) சங்க இலக்கியங்களிலே காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, கறுப்பு-சிவப்பு மட்பாண்டம் பற்றிப் பார;க்கலாம்:  தமிழ்நாட்டில் பெருந்தொகையான தாழிகள் ஆதிச்சநல்லூர;, கடலூர;, சாணூர; போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. இத்தாழிகள் மிகச் சிறப்பாகச் செய்யப்பட்ட கறுப்புச் சிவப்புக் கலங்களாக அமைந்துள்ளன. உள்ளே கறுப்பும் வெளியே சிவப்புமுடைய மட்கலங்கள் பெருங்கற் பண்பாட்டின் சிறப்பான கூறாகும். தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் பெருங்கற் பண்பாட்டின் எச்சமான இம்மட்கலங்கள் தொல்லியலாளரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.   இவை பற்றிச் சங்க இலக்கியங்கள் பெருந் தொகையான இடங்களில் குறிப்பிடுகின்றன.  எடுத்துக்காட்டாக, சிவந்த நிறமுடைய தாழி பற்றி பெருஞ்சித்திரனார; வெளிமான் இறந்த போது பாடிய புறநானூற்றுப் பாடல் 238 இல் பின்வருமாறு கூறுகின்றார;:
      “கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த
        செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா
        வாய்வன் காக்கையும் கூகையும் கூடி”
தமிழ்நாட்டில் தேனி மாட்டத்தில் ஆண்டிப்பட்டித் தாலுகாவிலுள்ள புலிமான்கோம்பை என்னும் இடத்தில் 2006ஆம் ஆண்டு மூன்று வீரக்கற்கள் (நடுகற்கள்) கண்டுபிடிக்கப்பட்டன.  இவ்வீரக் கற்களிலே எழுதப்பட்டுள்ள கல்வெட்டுக்கள் வரலாற்று முதன்மையுடையன.  சங்கப் பாடல்களின் காலத்தினை ஐயமின்றிக் கூறுதற்கு சான்றாகின்றன. முதலாவது வீரக்கல்லில் “கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர; ஆகோள்” எனக் கூறும் மூன்று வரிகள் காணப்படுகின்றன.  கூடலூரில் நடைபெற்ற ஆகோள் போரில் மடிந்த தீயவன் மகனாகிய அந்தவன் என்னும் வீரனுக்கு இக்கல் நடப்பட்டது என்பதை இக்கல்வெட்டுக் கூறுகின்றது.  இதில் ‘ஆகோள்’, ‘வீரக்கல் நாட்டுதல்’ ஆகிய இரண்டும் விளக்கப்படவேண்டியவை.   பசுக்களைக் களவாகக் கவர;ந்து செல்லுதலும் அவற்றை மீட்பதற்கு பசுக்களின் சொந்தக்காரர; போரிடுவதும் பண்டைத் தமிழகத்திலே ஆங்காங்கு நடைபெற்றிருக்கலாம்.  ஆனால் காலஞ்செல்ல அவ்வாறு ஆநிரையைக் கவர;தல் போருக்கு அறைகூவலாகக் கருதப்பட்டது. பண்டைத் தமிழ் இலக்கண மாகிய தொல்காப்பியம் அதனைப் புறத்திணையில் ஒரு துறையாகக் கூறுகின்றது. வெட்சிப் போரில் முதல்நிலையாக,
  “வேந்துவிடு முனைஞர; வேற்றுப்புலக் களவின்
  ஆதந்து ஓம்பல் மேவற்று ஆகும்.”  
என்று தொல்காப்பியர; கூறுவர;.  இவ்வாறு ஆநிரை கவர;தல் வெட்சிப் போராகவும் ஆநிரையை   மீட்டல் கரந்தைப் போராகவும் தமிழ் இலக்கணம் கூறியது.  இதுதான் ‘ஆகோள்’ எனப்பட்டது. புலிமான்கோம்பை வீரக்கல்லில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் குறிப்பிட்ட ‘ஆகோள்’ பற்றியும் அப்போரில் பங்குபற்றி வீரமரணம் அடைந்த வீரன் பற்றியும், அவ்வீரனின் பெயர; பொறித்த வீரக்கல் பற்றியும் சங்கப் பாடல்கள் கூறுகின்றன.  புறநானூறு 259 தொடக்கம் 265 வரையான பாடல்கள் ஆகோள் பற்றிக் கூறுகின்றன.  எடுத்துக்காட்டாக, உறையு+ர; இளம்பொன் வாணிகனார; பாடிய 264ஆம் பாடலைப் பார;க்கலாம்: 
“பரலுடை மருங்கிற் பதுக்கை சேர;த்தி 
மரல்வகுத்து தொடுத்த செம்பு+ங் கண்ணியொடு 
அணிமயிற் பீலிசூட்டிப் பெயர; பொறித்து
இனிநட்டனரே கல்லும் கன்றொடு 
கறவை தந்து பகைவர; ஓட்டிய 
நெடுந்தகை கழிந்தமை அறியாது 
இன்றும் வருங்கொல் பாணரது கடும்பே?”
பகைவர; பிடித்துச் சென்ற ஆநிரையினை மீட்பதற்காகச் சென்ற அந்த வீரன் கன்றுகளையும் கறவைகளையும் மீட்டுத் தந்து பகைவரையும் புறங்காட்டி ஓடச்செய்த வேளையில் களத்திலே வீழந்துவிட்டான்.  புலிமான்கோம்பைக் கல்வெட்டில் கூறப்பட்ட கூடல் ஊர; ஆகோளில் பட்ட தீயன் அந்தவன்போல், அவ்வீரனும் களத்திலே பட்டான்.  அந்தவனுக்கு நட்ட கல் போல் அவ்வீரனுக்கும் சிவந்த பு+ங்கண்ணியும் மயிற்பீலியும் சூட்டி, கல்வெட்டிலே அந்தவன் பெயர; பொறிக்கப்பட்டதுபோல், அவ்வீரனுடைய பெயரும் பொறித்துக் கல் நட்டனர;.  புறநானூறு 263ஆம் பாடலின் புலவர; பெயர; தெரியாது.  ஒரு வகையில் பெயர; தெரியாத ஒருவரால் வெட்டப்பட்ட புலிமான்கோம்பைக் கல்வெட்டுப் போலவே இப்பாடலும் அமைகின்றது. புலிமான்கோம்பைக் கல்வெட்டு கி.மு. 3ஆம் நூற்றாண்டக்கு முற்பட்டன எனத் தொல்லியலாளர; குறிப்பிடுகின்றனர;.  சங்கப் பாடல்கள் 3ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டன என்பதற்கு இக்கல்;வெட்டு சான்றாகின்றது.  
தமிழ் இலக்கியங்களை விடத் தமிழ் மொழி மிகத் தொன்மை வாய்ந்ததாகும்.  கி.மு. 1500 இனைச் சேர;ந்த வேதங்களிலே பல திராவிடமொழிச் சொற்கள் இருப்பதை மொழியியலார; சுட்டிக் காட்டியுள்ளனர;.  எனவே இம்மொழி கி.மு. 1500க்கு முற்பட்ட மொழி என அறியமுடிகின்றது. திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர;ந்த மொழிகளுள் தமிழ் மொழியே பழைமையானதாகும். அம் மொழியிலேயே கி.மு. 300க்கு முற்பட்ட இலக்கியங்கள் உள்ளன. 
சமநிலை
தமிழ் மொழி பண்டைய இலக்கியங்களைக் கொண்டுள்ளபோதும் இடையறாத இலக்கிய வளர;ச்சி உடையதாக இன்று வரையான நவீன இலக்கியங்களைக் கொண்டுள்ளதாக அமைகின்றது.  செம்மொழி இலக்கியங்களை கொண்டுள்ளபோதும் மக்கள் மயப்பட்ட இலக்கியங்களையும் கொண்டமைகிறது.  மொழியிலும் அன்று பயன்பட்ட செம்மொழிப் பண்புகள் இன்றும் பயன்பாட்டிலுள்ள தமிழ் மொழியிலே காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக: செம்மொழித் தமிழின் செவ்வியல் இலக்கியங்களாகிய சங்கத் தமிழ் நூல்களிலுள்ள பாடல்களிலே பயன்படும் மொழியமைப்பு இன்றும் நடைமுறையிலே இருப்பதைக் காட்டலாம்.  ஆய்வு வசதி கருதி என்னுடைய பிரதேசமாகிய யாழ்ப்பாணத் தமிழை உதாரணமாகக் கொள்கிறேன். யாழ்ப்பாணத்தமிழ் தனித்துவமான மொழியியல்புகள் பலவற்றையுடையதொன்றாக அறிஞர;களாலே கருதப்பட்டுள்ளது. இத்தமிழ் மொழியிலே சங்கப் பாடல்களிற் பயின்று வந்த சொற்களும் சொற்றொடர;களும் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன.  குறுந்தொகையிலிருந்து சில சான்றுகளைக் காணலாம்:
1. “நீ கண்டனையோ கண்டாரைக் கேட்டனையோ”  (குறுந். 75:1)  
“நீ கண்டனியோ கண்டாக்களைக் கேட்டனியோ”  (யாழ். தமிழ்)
2. “உது எம் ஊரே” (குறுந். 179:3) 
    “உது எங்கட ஊர;”  (யாழ். தமிழ்) 
உது என்னும் அண்மைச் சுட்டுப்பெயர; தமிழ் இலக்கணங்கள் குறிப்பிடும் மூன்று சுட்டுகளுள் ஒன்றாகும்.  தொல்காப்பியர; குறிப்பிட்ட இச்சுட்டு தமிழ்நாட்டுப் பேச்சு வழக்கிலே முற்றாக வழக்கிழந்துவிட்டது.  ஈழத்திலும் யாழ்ப்பாணம், மன்னார;, வன்னி ஆகிய பிரதேசங்கள் அடங்கிய வடபகுதியிலேயே இச்சுட்டு வழக்கி லுள்ளது.  யாழ்ப்பணத்தவர;கள் எங்கெல்லாம் வாழ்கின்றார;களோ அங்கெல்லாம் உது பயன்படுத்தப்படுகின்றது.  
மேலும் தமிழிலே இருவழக்குப்பண்பு தமிழ்ச்செம்மொழியின் சமநிலைபேணும் பண்பினையே சுட்டு கின்றது.  அன்று தொல்காப்பியம் “வழக்கும் செய்யுளும் நோக்கி” என்றே கூறினார;.  இன்றும் பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் நம்முடைய மொழியிலே இருக்கின்றன.  இலக்கிய ஆக்கங்க ளுக்கு அவை பயன்படுத்தவும்படுகின்றன.  
தெளிவு
செம்மொழித்தமிழ் இலக்கியத்திலும் மொழியிலும் தெளிவுநிலை நன்கு புலப்படுகின்றது.  செம்மொழி இலக்கியங்களாகிய சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம் முதலியன தாம் கூற வந்தனவற்றைத் தெளிவாகக் கூறுகின்றன.  காதல் பற்றிய புனைவுகளான பாடல்கள் அகத்திணைப் பாடல்கள் எனவும், அரசியல், வீரம், புகழ் முதலிய வாழ்க்கைத் துறைகளைப் பாடுவன புறத்திணைப் பாடல்கள் எனவும் கொள்ளப்பட்டன. மக்கள் மலையிலும் காட்டிலும் வயற்புறத்திலும் கடற்கரையிலும் அமைந்த ஊர;களில் வாழ்ந்து, உணவுப் பொருள்களுக்காக வேட்டை, உழவு, மீன்பிடித்தல் முதலிய தொழில்களில் ஈடுபட்டுவந்தனர;.  அன்பு, அழகு, வயது முதலிய பொருத்தப்பாடு உடைய ஆணும் பெண்ணும் காதல்கொண்டு திருமணம் செய்து இல்லற வாழ்க்கை நடத்தினர;. அக்காதல் வாழ்வினைச் சித்திரி;ப்பனவாகத் தோன்றிய வாய்மொழிப் பாடல்களிலே மலை, காடு, வயல், கடல் ஆகியவற்றின் அழகும் சிறப்பும் போற்றப்பட்டன. காதல் வாழ்வே அப்பாடல்களின் உரிப்பொருளாகக் கொள்ளப்பட்டது. அக்காதல் வாழ்வைப் புலப்படுத்துதற்கு அந்தந்த நிலத்தில் காணப்பட்ட மரம், விலங்கு, பறவை, தொழில், தெய்வம், உணவு, முதலியன கருப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டன.  அவ்வாழ்வுக்குப் பிற்புலமாக அமைந்த நிலமும் காலமும் முதற்பொருள்கள் எனப்பட்டன. இவ்வாறு நிலந்தோறும் எழுந்த வாய்மொழிப் பாடல்களின் மரபுகளையொட்டி புலவர;கள் பிற்காலத்தில் பாடிய சங்கப்பாடல்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைப் பாடல்களாக அமைந்தன. வீரம், கொடை, அரசியல், பண்பாட்டுக் கூறுகள் ஆகியன பற்றிப் பாடும் புறத்திணைப் பாடல்கள் பெயர; சுட்டிப் பாடுவனவாக அமைகின்றன. மன்னர;களையும் மக்களையும் பாடும் இப்பாடல்கள் வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டனவாக அமைகின்றன. அகத்திணை போலவே புறத்திணையும் ஏழு திணைகளாயின.  பகைவரின் நாட்டுப் பசுக்களைக் கவர;ந்து போருக்குத் தொடக்கம் செய்வது வெட்சித்திணை. பகைவர; நாட்டின்மேல் படையெடுத்துச் செல்வது வஞ்சித்திணை. பகைவரின் மதிலை முற்றுகையிடல் உழிஞைத்திணை. ஓர; இடம் குறித்து இருவர; படையும் எதிர;ப்பட்டு போர; செய்தல் தும்பைத்திணை. வெற்றி பெறுதல் வாகை. புகழ்ந்து பாடுதல் பாடாண்திணை.  உலக வாழ்வின் நிலையாமையைப் பாடுதல் காஞ்சித்திணை.  பாடாண்திணை, காஞ்சித்திணை தவிர;ந்த ஏனைய ஐந்து திணைகளும் போருடன் தொடர;புற்றன. இவ்வைந்து திணைப்போர;களில் இரு பக்கங்கள் இருக்கின்றன.  தாக்குபவர; ஒரு பக்கம்.  தாங்குபவர; அல்லது எதிர;ப்பவர; மறு பக்கம்.  இவற்றையெல்லாம் சங்கப் பாடல்கள் ஒழுங்குடனும் தெளிவுடனும் கூறுகின்றன.  
திருக்குறள் மிகச் சிறந்த கட்டமைப்புடனும் தெளிவுடனும் மனித வாழ்வின் மேம்பாட்டுக்குப் பலவற்றைக் கூறுகின்றது.  சிலப்பதிகாரம் அரசியல் பிழைத்தோர;க்கு அறங்கூற்றாவதும், உரைசால் பத்தினிக்கு உயர;ந்தோர; ஏத்தலும், ஊழ்வினை உருத்துவந்தூட்டும் என்னும் மூன்று விடயங்களைத் தெளிவாகப் புலப்படுத்துவதாக அமைகின்றது.  
செம்மொழித் தமிழ் மொழியும் தெளிவான அமைப்பினை உடையது. ஒட்டுமொழியாக அது அமைகின்றது. ஒரு அடிச்சொல்லுடன் பல்வகையான இடைச்சொற்களை ஒட்டுவதூடாக புதிய புதிய சொற்களை ஆக்கக்கூடியதாக உள்ளது.  சொற்கள் இயற்கையான பாகுபாட்டினை உடையனவாக அமைகின்றன.   சொற்கள் திணை, பால், எண், இடம் முதலியனவற்றைக் குறிப்பதை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.  தொடரியங்களிலே இயைபுநிலை தெளிவினை ஏற்படுத்துகிறது.  எழுவாய்ச் சொல் ஆண்பாலைக் குறிக்குமாயின் பயனிலைச் சொல்லும் ஆண்பாலைக் குறிப்பதாக அமையும்.
 
கட்டுப்பாடு
மொழிக்கட்டுப்பாடு என்பது எல்லா மொழிகளிலும் உண்டு.  இலக்கண வரம்புகள் என்றால் மொழியைச் சுற்றி முள்வேலி போடுவது என்ற ஒரு எண்ணமே பலரிடம் ஏற்படுகிறது.  வயலுக்கு வரம்பு அமைக்காவிட்டால் நீரெல்லாம் வெளியே வழிந்தோடிவிடும்.  வரம்பு நீரினைத் தேக்கிவைத்து நெல்லின் வளர;ச்சிக்கு உதவுகின்றது.  இதபோலத்தான் மொழிவரம்பும்.  
“பெயரில் தோன்றும் பாலறி கிளவியும் 
வினையில் தோன்றும் பாலறி கிளவியும் 
மயங்கல் கூடா தம்மரபினவே”
என்னும் தொல்காப்பியச் சூத்திரம் (சொல். கிளவியாக்கம் சூத். 11) தமிழ் மொழியின் சொற்றொடர; ஒழுங்கு பற்றிக் கூறுகின்றது.  தொல்காப்பியர; காலந் தொடக்கம் இன்று வரையும் இதே ஒழுங்கு முறையிலேயே நம்முடைய வாக்கிய ஒழுங்கு அமைகின்றது. ஆங்கில மொழியிலே ர்ந ஊழஅநள என்றும், வுhநல உழஅந என்றும் பேசுவதும் எழுதுவதுமே சரியானதாகும்.  எவராவது வுhநல உழஅநள என்றோ ர்ந உழஅந  என்றோ எழுதுவதும் பேசுவதும் இல்லை.  இத்தகைய தொடர;பு இயைபு ஆங்கில மொழியிலே சொற்றொடர; வரம்பாக அமைந்துள்ளது. எவரும் அதனை மீறுவதில்லை.  இதே போன்ற இயைபு வரம்பு தமிழ் மொழியிலும் இருக்கின்றது.  இதனையே தொல்காப்பியச் சூத்திரமும் (கிளவியாக்கம்: 11) கூறுகின்றது.  இன்று இந்த வரம்பினைக் கற்றவரும் மற்றவருமே மீறுவதைக் காண்கிறோம்.  “பல கூட்டங்கள் நடைபெற்றது” என்றும், “நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் நடைபெற்றன” என்றும் எழுதியும் பேசியும் வருகின்றனர;.  ஆங்கில மொழியினை எழுதும்பொழுதும் பேசும்பொழுதும் வரம்பு மீறாத கனவான்கள் தமிழ் மொழியிலே இலகுவாக மீறுகின்றார;கள். இதற்காகத்தான் இவ்விலக்கண வரம்பினை மீறக்கூடாது என்று இளவயதிலேயே பிள்ளைகளுக்குக் கற்பிக்கவேண்டியுள்ளது.  
 
பேச்சு வழக்கினை சிறுகதை, நாவல்;, நாடகம், கவிதை ஆகியவற்றிலே கையாண்டு இலக்கியங்கள் படைக்கத் தொடங்கியபோது, இவ்வாறு இலக்கியங்கள் படைப்போர; இலக்கண வரம்பினை மீறுவோரென உயர;இலக்கிய நூல் வல்லாராலே கூறப்பட்டது. நம்முடைய மொழி இரு வழக்குப் பண்புடையது.  பேச்சு வழக்கினைச் சில சந்தர;ப்பங்;களிலும் எழுத்து வழக்கினை வேறு சந்தர;ப்பங்களிலும் பயன்படுத்தி வருகின்றோம்.  இன்றைய இலக்கியங்களைப் படிக்க பேச்சு வழக்கு வேண்டியுள்ளது. இவ்வழக்குப் பிள்ளைகளுக்குத் தனியாகக் கற்பிக்கவேண்டியதில்லை. அது அவர;கள் இயற்கையாகவே அறிகின்ற மொழி.  ஆனால் நம்முடைய மொழியிலே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட செம்மொழி இலக்கியங்கள் இருக்கின்றன.  அவற்றை நம்முடைய பிள்ளைகள் படித்து இரசிப்பதற்கு இலக்கிய வழக்கினை அவர;கள் அறிய வேண்டிய அவசியமுண்டு. இதனால் பண்டைத்தமிழ் இலக்கணப் பயிற்சி பெறவேண்டிய தேவை ஏற்படுகின்றது.  மேலும் இன்றும் அன்றிருந்து வரும் செந்தமிழ் அமைப்புள்ள மொழியினையே பேசுகிறோம்.  சொற்களின் வடிவம்,  ஒலிகள் சிற்சில இடங்களில் வேறுபடலாம்.  ஆனால் அமைப்பு ஒன்றாகவே உள்ளது.  எனவே பண்டைய மொழி இயல்புகளைக் கூறும் நம்முடைய இலக்கண நூல்கள் கூறும் இலக்கண வரம்புகளை நாம் நமது நல்ல தேவைகளுக்காகப் பேணவேண்டியுள்ளன.
 
மொழியிலே அமையும் வரம்பு போல இலக்கியத்துக்கும் தமிழிலே வரம்பு அமைத்துள்ளனர;.  தமிழ் மொழயின் அகத்திணைப் பாடல்களிலே காதலன் - காதலி பெயர; சுட்டாமை ஒரு வகைக் கட்டுப்பாடு போலப் பண்டைய புலவர;களால் பேணப்பட்டுவந்துள்ளது.  
தூய்மை
தனித்து இயங்கக்கூடிய தன்மை செம்மொழிக்குரிய இன்னொரு பண்பாகும்.  சங்கப் பாடல்களிலேபிறமொழிகளின் தாக்கம் மிகக் குறைவே. இன்றும் தமிழ் மொழியிலுள்ள பிறமொழிச் சொற்களை நீக்கிவிட்டு அவற்றுக்குப் பதிலாக புதிய சொற்களை ஆக்ககக்கூடிய வளம் அம் மொழியிலே உள்ளது.  இப்படியான கருத்தினைக் கூறியவுடன் இவர;கள் தூய்மைவாதம் பேணுகிறார;கள் என்று கூறியவர;களும் உளர;.
தமிழ்மொழி தூய்மை பேணவேண்டிய தேவை என்ன என்பதை உணர;த்த ஓர; எடுத்துக்காட்டு மட்டும் தருகிறேன்.  தமிழ் மக்கள் திராவிட பெருங்கற்பண்பாட்டு மரபுக்கேற்ப மலைப்பண்பா டுடையவர;கள்.  இதன் விளைவாக நம்முடைய மொழியிலே மலை பற்றிப் பெருந் தொகையான சொற்கள் இருக்கின்றன.  இவ்வளவு சொற்களும் இருக்க பெருந்தொகையான சமஸ்கிருத சொற்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் என்ன?  பின்வரும் சொற்களை ஒப்பிட்டு நோக்குக: 
    மலை பற்றிய சொற்கள்
தமிழ்ச் சொற்கள் வடமொழிச் சொற்கள்
1. விலங்கல் 1. சயிலம்
2. விண்டு 2. சிமயம்
3. வெற்பு 3. சிகரி
4. சிலம்பு 4. சிலோச்சியம்
5. பொருப்பு 5. பு+தரம்
6. பொங்கர; 6. பருப்பதம்
7. பொறை 7. பாதவம்
8. கோ 8. அத்திரி
9. பதலை 9. குத்திரம்
10. பறம்பு 10. கோத்திரம்
11. நகம் 11. தாணு
12. அடுக்கல் 12. அசலம்
13. நவிரம் 13. சானு
14. குவடு 14. மேரு
15. குன்று 15. ஓதி
16. ஓங்கல் 16. வீரம்
17. பிறங்கல் 17. கிரி
18. கல் 18. காண்டம்
19. வரை 19. பீலி
20. பொகுட்டு 20. திகிரி
21. சாரல் 21. அரி
22. பொற்றை 22. மாதிரம்
23. நாகம் 23. தரணி
24. சிலை 24. சிமிலம்
25. குறும்பொறை 25. சையம்
26. இறும்பு 26. பத்திரம்
27. தடம் 27. வேதண்டம்
28. கோடு 28. இரவி
29. கூடம் 29. மேதரம்
30. பாறை 30. போதி
31. துறுகல்
32. மலையம்
33. கொடுமுடி
34. சேண்முகம்
35. கற்பாழி
36. வல்லியம்
37. அருப்பம்
ஒரு காலத்தில் தமிழ்ச் சொற்களைத் தள்ளிவிட்டு வடமொழிச் சொற்கள் அவற்றின் இடத்தைப் பிடித்துக்கொள்ள முயற்சி செய்யப்பட்டது.  இம்முயற்சியில் ஓரளவு வெற்றியும் கண்டனர;.  மலை பற்றிய பல சொற்களை நாம் இன்று இழந்துள்ளோம்.  இது தொடர;ந்து நடைபெறுகிறது.  ‘யன்னல்’ என்ற ஒரு பிறசொல் வந்தவுடன் ‘காலதர;’, ‘பலகணி’, ‘சாளரம்’ என்னும் மூன்று சொற்கள் நம்மிடமிருந்து பறந்துவிட்டன.  இதனாலேயே நம் அறிஞர;கள் சிலர; தூய்மைவாதம் பேசினார;கள்.
 
உயர; இலட்சியம் 
புறநானூற்றுத் தமிழர; ‘சான்றோன்’ பற்றிய உயர;வான எண்ணமுடையவராக இருந்தனர;. புறநானூறு 312ஆம் செய்யுள் “ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே, சான்றோனாக்குதல் தந்தைக்கக் கடனே”  என்று கூறுகின்றது.  பிறந்த பிள்ளையை சான்றோனாக ஆக்கவேண்டு மென்ற எண்ணம் மக்களிடையெ இருந்தது.  தமிழ் மக்கள் “சான்றோன்” எனப்படும் இலட்சிய மகனைப் பாராட்டிய காலத்தில் இத்தாலிய நாட்டில் உரோமையர; “ளயிநைளெ” (அறிவுடையோன்) எனப்படும் இலட்சிய புரு‘னைப் போற்றிவந்தனர;. உரோமையருடைய “சாப்பியன்ஸ்” அல்லது சான்றோன் சமுதாயத்திலிருந்து விலகி, தன் சொந்தப் பண்புகளை வளர;க்க வேண்டும்.  உரோம் பேரரசின் சிந்தனையாளர;களாகிய ஸ்டாயிக் வாதிகளின்படி அவர;களுடைய சான்றோர; சிலரேயாவர; என்றும் அவர;களும் தனிமையாகத் தம் இல்லங்களிலே வாழ்ந்து வருபவர;கள் என்றும் அறிகிறோம்.  ஆனால் அதே நேரம் சங்க இலக்கியம் காட்டும் சான்றோரோ மிகவும் வேறுபட்டவராக உள்ளனர;.  ஒவ்வொரு தாயும் தன் மகன் சான்றோன் ஆகுதல் கூடும் என்று எதிர;பார;ப்பாள்.  தன் பிள்ளையைச் சான்றோன் ஆக்குதல் ஒவ்வொரு தந்தைக்கும் கடனாகும்.  தமிழ்ச் சான்றோன் சமுதாயத்திலே வாழ்ந்து தன்னால் இயன்றவரை சமுதாயத்திற்குப் பல நன்மைகளைச் செய்வான். உரோமையருடைய சான்றோர; அரிதாகவே சமுதாயத்தில் தோன்றுவர;. ஆனால் தமிழ்ச் சான்றோர; பலர; வாழும் ஊரே வாழ்க்கைக்கு இன்பம் தரும் என பிசிராந்தையார; கோப்பெருஞ்சோழனுக்குக் கூறுகின்றார;.
“ஆன்றவிந் தடங்கிய கொள்கைச
  சான்றோர; பலர;யான் வாழும் ஊரே.”
செம்மொழி இலக்கிய காலத் தமிழர; பல உயர; இலட்சியங்களுடன் வாழ்ந்தனர;.  சங்க இலக்கியங்கள் சித்திரித்த அத்தகைய இலட்சியங்களை திருவள்ளுவர; திருக்குறளிலே சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறியுள்ளார;.  செயலில் மாத்திரமன்றி எண்ணத்திலும் உயர;ந்தன வற்றை எண்ணவேண்டும் என்பதை வள்ளுவர; “உள்ளுவதெல்லாம் உயர;வுள்ளல்” என்று கூறியுள்ளார;.. 
உலகப்பொதுமை
 செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் உலகுதழுவிய கருத்துக்கள் பல இடங்களிலே பதிவுசெய்யப்பட்டுள்ளன.  “யாதும் ஊரே யாவரும் கேளிர;” (புறம்: 192)  என்னும் கணியன் பு+ங்குன்றனின் பாடல் உலகறிந்ததாகும். ‘உலகத்திலுள்ள எல்லா ஊர;களும் நம்முடைய ஊர;களே! எல்லா மக்களும் நம்முடைய உறவினர;களே!’ என்று கூறும் இச்செய்யுளடிகள்  சோவியத் ர‘;யாவின் கிரெம்ளின் நகர; நடுவிலே ஒரு வளைவில் பொறிக்கப்பட்டுள்ளன.  இது போன்ற உலகு தழுவிய பார;வை செம்மொழித் தமிழரிடையே பெரிதும் நிலவியது.   “உண்டாலம்ம இவ்வுலகம்” (புறம்: 182) என்னும் கடலுள் மாய்ந்த இளம்வழுதியின் பாடலில் உலகு அறியவேண்டிய விழுமியங்கள் கூறப்படுகின்றன:
உண்டா லம்ம இவ்வுலகம் இந்திரர;
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் 
தமியர; உண்டலும் இலரே; முனிவிலர;; 
துஞ்சலும் இலர;; பிறர; அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிரும் கொடுக்குவர;; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர;; அயர;விலர;; 
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர;க்கென முயலுநர; உண்மை யானே
நாம் வாழுகின்ற இந்த உலகம் இது வரையும் நிலைபெற்று நிற்பதற்கான காரணம் பின்வரும் பெரு மக்கள் இந்த உலகத்திலே வாழ்கின்றமையேயாகும் என இப்பாடல் கூறுகின்றது:
1. இந்திரன் முதலாய தேவர;களுக்குக் கிடைக்கக்கூடிய சாகா மருந்தாகிய அமிழ்தம் கிடைத்தாலும் அதனைத் தனியாகத் தாமே உண்ணாதவர;.
2. சினம் கொள்ளாதவர;.
3. சோம்பலுடன் நித்திரை கொள்ளாதவர;.
4. மற்றவர;கள் அஞ்சுகின்ற துன்பத்துக்குத் தாமும் அஞ்சுபவர;கள்.
5. புகழ் என்றால் உயிரையும் கொடுப்பவர;.
6. பழி என்றால் உலகத்தையே தருவதென்றாலும் அதனைக் கொள்ளாதார;.
7. தமக்கென்று எதுவும் செய்யாது பிறர;க்கென உழைக்கும் உண்மையான இயல்புடையவர;.
இத்தகையோர; வாழ்கின்ற காரணத்தினாலேயே இந்த உலகம் இன்றும் நிலைத்திருக்கின்றது என்னும் அருமையான கருத்தினைப் புலவர; கூறியுள்ளார;.
இவ்வாறான உலகத்தின் இயற்கை எவ்வாறுள்ளது என்று அடுத்த பாடலிலே (194) சொல்லப்படுகின்றது.  ஒரு வீதியிலே உள்ள ஒரு வீட்டிலே இறப்பைக் குறிக்கும் நெய்தல் பறை முழங்குகின்றது.  அதேவேளை அதே வீதியிலுள்ள இன்னொரு வீட்டிலே மங்கலப் பறை முழங்குகின்றது.  கணவனுடன் சேர;ந்திருப்போர; பு+வணிந்து மகிழ்ச்சியுடன் உள்ளனர;. அப்படி இல்லாதோர; கண்ணீர; சிந்துகின்றனர;.  இந்நிலையுள்ள உலகத்தைப் படைத்த இறைவனைப் புலவர; பண்பிலாளன் என்கிறார;.  ஆனால் அதேவேளை இத்தகைய இயல்பு உடைய உலகத்தினை  உணர;ந்து கொண்டு இனிய காண்க என  நம்பிக்கையும் ஊட்டுகிறார;.  அப்பாடல் வருமாறு:
                “ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
                ஈர;ந்தண் முழவின் பாணி ததும்பப்
                புணர;ந்தோர; பு+வணி அணியப் பிரிந்தோர;
                பைதல் உண்கண் பனிவார;பு உறைப்பப்
                படைத்தோன் மன்ற அப்பண்பி லாளன்
                இன்னாது அம்ம இவ்வுலகம்
                இனிய காண்க இதனியல் புணர;ந்தோரே.”
வள்ளுவனுடைய குறள் உலகப் பொதுமையை நன்குணர;ந்து இயற்றப்பட்டது: எந்த நாடோ, மொழியோ, சமயமோ, எவருடைய பெயரோ குறிப்பிடாத ஒரு நூல்.  “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” எனப் பாரதி கூறியது மிகப் பொருத்த மானதாகும். 
நியாயமுடைமை
உரைக்கும் நிலையால் ஒரு முடிவைக் கூறும் ஆற்றல் இளையவர;களிடம் இல்லை என நரைமுடி கொண்ட மக்கள் கருதுவர;.  அந்த முதியவர;களுடைய கருத்திற்கு ஒரு முடிவைச் சோழ மன்னன் தன்னுடைய சொல்லால் நல்லாட்சி செய்து காண்பித்தான். கரிகாற் சோழன் இளவயதிலே அரசனானவன்.  அவனுடைய அவைக்கு நீதி கேட்டுச் சில முதியோர; வந்தனர;.  அங்கு இளவயதினனான அரசனைப் பார;த்தவுடன் இவன் நீதி தீர;ப்பானா என ஐயப்பட்டனர.; நிலைமையை நன்குணர;ந்த கரிகாலன் அவர;களைச் சிறிது நேரம் பொறுக்கும்படி கூறிச்சென்று தன் தலையை நரைமுடியாக்கி அரசவைக்கு வந்து நரைத்த தலையுடையவர; வியக்கும்படி சரியான நீதி தீர;த்தான். அவனுடைய முன்னோர;களுடைய நீதித்திறனை அவன் பெற்றிருந்தான்.   குல வித்தைக்குத் தனியான கற்பித்தல் தேவையில்லை.  அது தானாகவே திறமையாகச் செயற்படும்.  சங்கப் பாடல்களில் கரிகாற் சோழன் நீதி தீர;த்த செய்தி இடம்பெறுகிறது.  பின்னர; இச்செய்தி பழ்மொழி நானூறு பாடலிலில் கூறப்பட்டுள்ளது.
செம்மொழித் தமிழின் மிகச் சிறந்த காப்பியமாகக் கருதப்படும் சிலப்பதிகாரம் பாண்டியன் அவையிலே நீதி கேட்டுச் சென்ற கண்ணகி வழக்குப் பற்றியும், தான் அநீதியாக நடந்து கொண்டதை உணரும் பாண்டிய மன்னன் அவையிலேயே உயிர;துறக்கும் செய்தியையும் கூறி தமிழ் மன்னர;கள் நீதி நியாயத்துக்கு எவ்வளவு மதிப்பளித்தனர; என்பதை உணர;த்துகின்றது.
 
ஒழுங்கு
சங்க இலக்கியங்கள் முதல் அறநீதி இலக்கியங்கள் தனிமனித ஒழுக்கம், சமூக ஒழுங்கு பற்றிப் பேசுகின்றன.  ஒழுங்கு தவறியபொழுது மன்னனையே இடித்துரைக்கும் புலவர;கள் அன்று வாழ்ந்தார;கள். ஒரு எடுத்துக்காட்டினை இங்கு தரலாம்.  வையாவிக்கோ பேகன் தன்னுடைய மனைவி கண்ணகி வருந்தும்படியாக நல்லூர;ப் பரத்தை வீட்டுக்குச் செல்கிறான்.  இதை அறிந்த தமிழ்ப் பலவர;கள் பேகனைக் கண்டித்துப் பாடிய பாடல்கள் புறநானூற்றிலே இடம்பெற்றுள்ளன.     பரணர;, கபிலர;, அரிசில் கிழார;, பெருங்குன்றூர; கிழார; ஆகியோர; பாடினர;.  புறநானூறு 141ஆம் பாடலில் கபிலரிடம் கண்ணகி பின்வருமாறு கூறகிறாள்:
  “எம்போல் ஒருத்தி நலன்நயந்து என்றும்
           வரூஉம் என்ப வயங்குபுகழ்ப் பேகன்
  ஒல்லென் ஒலிக்கும் தேரொடு
  முல்லை வேலி நல்லூரானே”
இதனைக் கேட்ட கபிலர; நேரடியாக பேகனிடம் செல்கிறார;. “மன்னா! எங்களிடம் பசியுமில்லை பாரமும் இல்லை.  நாம் உன்னிடம் வேண்டும் பரிசில் ஒன்றுதான்.  நீ அறஞ்செய்வாயாக. உடனடியாக உன்னுடைய தேரிலேறி கண்ணகியிடம் செல்வாயாக.” (புறம். 142) என்று கூறினார;.  இது போலவே புலவர; அரிசில்கிழாரும் (புறம். 143) “மன்னா நீ என்னை நயந்து பரிசில் ஏதாவது நல்குவாயாயின் உடனடியாக உன் மனைவியிடம் செல்” என்று கூறினார;. புலவர;களாகிய பெருங் குன்றூர;கிழாரும், வன்பரணரும் பேகனுடைய ஒழுக்கக் குறைவை எண்ணியே பாடுகின்றனர;.
செம்மொழிக்கால ஒழுக்கம் பேணும் விடயத்தை வள்ளுவர; தன்னுடைய திருக்குறளிலே ஒழுக்கம் என்னும் ஓர; அதிகாரத்தை வகுத்து விரிவாகக் கூறியுள்ளார;;;.      
  “ஓழுக்கம் விழுப்பம் தரலின் ஒழுக்கம் 
  உயிரினும் ஓம்பப் படும்.”
ஒழுக்கத்தை உயிரைவிட மேம்பட்ட நிலையிலே வைத்து அவர; பாடுகின்றார;.  
 
மனிதாயம்
செம்மொழிக்கால மனிதாயம் பற்றி தனிநாயக அடிகளார; நன்கு கூறியுள்ளார;. பரந்த ஆளுமை, மனித இனநலக் கோட்பாடு பற்றி இலத்தீன் புலவர; ரெரன்ஸ் (வுநசசநnஉந) என்பார;  “நான் மனிதன்; மனிதனைச் சார;ந்த எதுவும் எனக்குப் புறமன்று” என்று கூறியுள்ளதை அடிகளார; சங்க இலக்கிய “யாதும் ஊரே யாவரும் கேளிர;” என்ற பாடலடி கூறும் கருத்துடனே ஒப்புநோக்கிப் பார;த்துள்ளார;. அதனை மேலும் வலியுறுத்த செம்மொழித் தமிழ் இலக்கியங்களான திருக்குறளிலிருந்து
  யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
  சாந்துணையும் கல்லாத வாறு.    (திரு, 397)
கற்றவன் ஒருவனுக்கு எல்லா நாடுகளும் அவன் நாடே.  எல்லா ஊர;களும் அவன் ஊர;களே. அப்படியானால் ஏன் ஒவ்வொருவரும் சாகும்வரையும் கல்லாமல் இருக்கவேண்டும்? என்றொரு வினாவினைத் தொடுக்கிறார; வள்ளுவர;. வள்ளுவ னுடைய கருத்தினை மேலும் வலியுறுத்துகிறது பின்வரும் பழமொழி நானூறு பாடல்:
ஆற்றவும் கற்றார; அறிவுடையார; அஃதுடையார;
நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்.
கற்றவர;கள் செல்லாத நாடில்லை. அவ்வாறு சென்ற நாடுகள் எல்லாம் வேற்றுநாடுகள் என்று கருதாமல், தம் நாடுகள் என்றே கருதினர;.
தனக்கென வாழாப் பிறர;க்குரியாளனாக வாழும் இயல்பு:  “அன்பின் வாழ்க்கையிலும் பிறருடன் கலந்து வாழும் முறைகளிலும் அல்லது பிறர;நல இயலை வளர;ப்பதிலும் தமிழ்ப் பண்பாட்டின் இன்றியமையாத கொள்கை தோன்றுகிறது.  ஆய் எனும் வள்ளலைப் போற்றுதற்குக் காரணம் என்னவெனின் அவன் நன்மையை நன்மைக்காகவே செய்துவந்தான்.  பிறர; போற்றுவார;க ளென்றோ  வேறு நலன்களைப் பெறலாமென்றோ அவன் நன்மையில் ஈடுபடவில்லை என்பதே.
“இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
அறனிலை வணிகன் ஆய் அலன்”   (புறம்: 134)
“பண்புடையார; பட்டுண்டு உலகம், அது இன்றேல்
  மண்புக்கு மாய்வது மன்”           (திரு. 996)
என செம்மொழி இலக்கியங்கள் கூறுகின்றன.  பண்புடைமையெனும் அதிகாரத்திற்கு உரை கண்ட பரிதிப்பெருமாள் கூறுவார;: ‘பண்புடைமையாவது யாவர;மாட்டும் அவரோடு அன்பினராய்க் கலந்து ஒழுகுதலும், அவரவர; வருத்தத்திற்குப் பரிதலும், பகுத்து உண்டலும், பழிநாணலும் முதலான நற்குணங்கள் பலவும் உடைமை.”   பசிப்பிணி தீர;க்கும் பண்ணனுடைய செயற்பாடு சங்கத்தமிழருடைய மனிதாய எண்ணத்தினை நன்கு புலப்படுத்துகிறது.  
 
பயன்பாடு
செம்மொழி பண்டைக்காலந்தொட்டு நம்முடைய மொழியின் தனத்துவமான இயல்பகளையும், தமிழர; வரலாற்றினையும், தமிழருடைய சிறப்புவாய்ந்த இலக்கியங்களையும் நாம் அறிய உதவியுள்ளது. ஆனால் இந்திய அரசு உத்தியோக முறையில் தமிழ்ஒரு செம்மொழி என ஆணை பிறப்பித்ததால் பல பயன்பாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. அவை வருமாறு:
1. செம்மொழியாலே நம் மொழி பேணப்படுகின்றது.  
2. நம்முடைய இலக்கிய வரலாற்றையும் மொழி வரலாற்றையும் அறிவதற்கு சான்றுகள்  தரக்கூடியது.  தந்துகொண்டிருக்கிறது.
3. உலகப் பல்கலைக் கழகங்களில் செம்மொழிக் கற்கைநெறியில் செம்மொழித் தமிழையும் கற்கும் வாய்ப்புண்டு.
4. செம்மொழி இலக்கியங்கள் விரைவாக மொழிபெயர;க்கப்பட செம்மொழி மையம் உழைக்கின்றது.  பெருந்தொகையான செம்மொழித்தமிழ் இலக்கியங்கள் பிற மொழிகளிலே மொழிபெயர;ப்பதற்கு செம்மொழி மையம் பணியாற்றி வருகின்றது.  
5. முன்னர; செம்மொழி பற்றி பேசுவதற்கு பலரும் பின்னின்றனர;.  ஆனால் இன்று தமிழ் ஒரு செம்மொழி என இந்திய அரசின் ஒப்புதல் இருப்பதால், உலக நாடுகளிலுள்ள தமிழர;களுக்கு அதனை உரத்த குரலில் எடுத்துக் கூறலாம்.  அவர;களுள் கற்றவர;கள், உயர;கல்வி நிறுவனங்களில் பணிசெய்பவர;கள் செம்மொழித் தமிழை மேம்படுத்த தம்மாலான உதவிகளை வழங்கக்கூடிய வாய்ப்புகள் உள. பல்கலைக் கழகங்களில் தமிழ்மொழிக் கற்கைநெறியினை அவ்வப்பல்கலைக் கழகச் செம்மொழித் துறையிலே தொடங்குதற்கு அவ்வந்நாட்டுத் தமிழறிஞர;கள் முயற்சிகளை மேற்கொள்ள ஊக்குவிக்கவேண்டும்.  அவ்வந்நாட்டுப் புலம்பெயர; தமிழர; நிறுவனங்கள் பல்கலைக் கழகங்களில் செம்மொழித் தமிழுக்கான பேராசிரியர;த் தவிசுகள் அமைக்க வேண்டுமென அவ்வந்நாட்டு அரசுகளுக்கு வேண்டுகைகளை அனுப்பவேண்டும். புலம்பெயர; நாடுகளில் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை நடத்தும் தமிழர;கள் தமிழ் ஒரு செம்மொழி என்பதை இளையவர;கள் அறிந்து பெருமைப்படும்படியாக நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்யவேண்டும். 
6. முன்னர; செம்மொழிகளென இந்திய அரசு இனங்கண்ட சமஸ்கிருதம், பாளி, அரபிக் ஆகிய மொழிகளின் மேம்பாட்டுக்கென இந்திய அரசு மானியம் வழங்கிவந்தது.  இப்போது இந்திய அரசு செம்மொழித் தமிழ் மேம்பாட்டுக்காக மானியம் வழங்குகின்றது.