சங்ககால அகத்திணை மரபுகள் - N சபா. அருள்சுப்பிரமணியம்

 

 

    சங்ககால அகத்திணை மரபுகள்   
N சபா. அருள்சுப்பிரமணியம்
 
“இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடிகளாக அமைகின்றன” என்ற கூற்றுச் சங்க இலக்கியங் களைப் பொறுத்தமட்டிலும் பொருத்தமுடையதாக உள்ளதென்பதை அக்கால அகத்திணை   இலக்கியக்கியங்களும் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. வழிவழியாகப் படைக்கப்பட்ட பல்வேறு இலக்கியங்களும் டாக்டர; மு.வரதராசன் அவர;களின் “மொழியை வளர;ப்பவர;களும் மொழியால் வளர;பவர;களும் மக்களே” என்ற கருத்திற்கு உரம் சேர;ப்பனவாக அமைகின்றன. மொழியை வளர;த்து மொழியால் வளரும் குமுகாயமாகவே இன்றைய புலம்பெயர;ந்;து வாழும் தமிழ்க் குமுகாயமும் காணப்படுகிறது. 
  
புலம்பெயர;ந்த நாடுகளில் வாழும் தமிழர;களிடையே தமிழ்மொழி தொடர;பான அக்கறையையும், ஆர;வத்தையும் வளர;க்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் பல. அந்த முயற்சிகளுள் இந்த மாதாந்தக் கருத்தரங்கு நிகழ்ச்சியும் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைகிறது. இங்கு முன்வைக்கப்படும் கருத்துகளும் பரிந்துரைகளும் பரவலாகப் போய்ச் சேரவேண்டியவர; களிடம் போய்ச்சேரும் என்ற பாரிய நம்பிக்கையும் எதிர;பார;ப்பும் எந்தளவிற்கு வெற்றிதரும் என்ற வினா நம்முன் எழுந்து நின்றாலும் நம்பிக்கையின் அடிப்படையில் நடத்தப்படும் இக்கருத்தரங்கு வெற்றிபெறும் என்ற நேர;நோக்குடன் செயற்படுவோம்.
புலம்பெயர;ந்த மண்ணில் பல்லின கலாசார பண்பாட்டுச் சூழலின் நடுவே வாழும் எமது இளவல் களிடம் தன்னினம், தன்மொழி சார;ந்த விழிப்புணர;வை ஏற்படுத்தவேண்டிய கட்டாயம் இன்றைய மூத்தோர;முன் வைக்கப்பட்டுள்ள ஒரு பாரிய கடனாக இருக்கிறது. தமிழின் பெருமையையும், தமிழின் தொன்மையையும் எமது இன்றைய சந்ததி உணரும்போதே தற்துணிபோடும், பெருமிதத் தோடும் தமிழை அடுத்த சந்ததிக்கு எடுத்துச்செல்லும் தமது பணியை நம்பிக்கையுடன் முன்னெ டுத்துச் செல்வார;கள். இதற்கான அடித்தளத்தை இடுவதாக இதுபோன்ற முயற்சிகள் அமையு மென்பதே பலருடைய எதிர;பார;ப்புமாகும். 
அந்தவகையில் இன்று “சங்ககால அகத்தணை மரபுகள்” என்னும் தலைப்பில் சங்ககாலம் பற்றிய ஒரு பரவலான பார;வையை இங்கு முன்நிறுத்துவோம்.
எழுதா இலக்கியங்கள் என்று கொள்ளப்படும் நாட்டார; இலக்கியங்களுடன் தொடங்கிய தமிழரின் இலக்கிங்கள் 2500 ஆண்டுகால பரப்பளவைக் கொண்டவை. இத்தகைய தொன்மைகொண்ட தமிழ் இலக்கிய வரலாற்றுக் காலமானது காலச் சூழல், ஆட்சி நிலை, மக்களின் வாழ்வு என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு மூன்று பெரும் பகுதிகளாகப் பிரித்து நோக்கப்படுகிறது. முற்காலம், இடைக்காலம், தற்காலம் என்று கொள்ளப்படும் இப்பகுதி அறிஞர;களால் காலச்சூழல், ஆட்சி நிலை, வாழ்வியல் என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு நோக்கப்படுவதை நாம் காணலாம். 
இந்தவகையில் முற்காலம் என்று கிறித்துவிற்கு முற்பட்ட சில நூற்றாண்டுகள் தொடங்கிக் கடைச்சங்க காலமாகிய கி.பி. 2ஆம் நூற்றாண்டின் இறுதிவரை உள்ள காலப்பகுதி கொள்ளப்படு கிறது. கி.பி. 300 முதல் கி.பி. 1300 வரையுள்ள காலப்பகுதி என்று கொள்ளப்படும் இடைச்சங்க காலப்பகுதியானது சங்கமருவிய காலம், பல்லவ காலம், சோழர; காலம் என்று வரலாற்று ஆசிரியர;களால் வகுக்கப்பட்டுள்ள பகுதிகளை கொண்டுள்ளது. பிற்காலப்பகுதி என்று சுட்டப்படும் பகுதியான கி.பி. 1300 முதல் இக்காலம் வரையுள்ள நாயக்கர; காலம், ஐரோப்பியர; காலம் என்பவற்றை உள்ளடக்கியதாக அமைகிறது. ஐரோப்பியர; காலப்பகுதியைத் தொடர;ந்து வந்த காலப்பகுதி விடுதலைக்காலம் என்ற பகுப்புள் அடங்குவதையும் நாம் காண்கிறோம்.
சங்ககாலம் பற்றியும் அதன் இலக்கிய மரபுகள் பற்றி அறிந்துகொள்வதற்கு இந்த முன்நோக்கிய பார;வை அவசியமாகவே உள்ளது. பொதுவாகவே இலக்கியம் பற்றிப் பேசமுனையும் எவரும்   “இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி”யாக அமைந்துள்ளன என்று கூறுவதை நாம் கேட்டுவருகிறோம். சங்ககாலம் என்பது மக்கள் பசியும், பிணியும், பகையும் நீங்கி வளமான வாழ்வை வாழ்ந்த காலப்பகுதி என்பது அக்கால இலக்கியங்க;டாக நாம் பெறும் செய்தியாகும். அன்றைய ஆட்சியாளர;களாக விளங்கிய மூவேந்தர;களும் குறுநிலமன்னர;களும் அறம், பொருள், இன்பம் செழித்தோங்க ஆண்டார;கள். அவர;களின் சமூகச் செயற்பாடுகள் மக்கள் ஏற்றத்தாழ்வற்ற சமூக அமைப்பின்கீழ் சுதந்திரமாக வாழ வழிவகுத்தன. அத்துடன் அவர;களிடம் காணப்பட்ட தமிழுணர;வும், சான்றோர;களை மதிக்கும் பண்பும், தமிழ்ப்புலவோர;க்கு அளித்த பதவிகளும் பரிசில்களும் நல்லபல இலக்கியங்கள்  உருவாக வழிவகுத்தன. இங்கு புலவோரைப் போற்றிய அரசர;களே புலவர;களாய்த் திகழ்ந்தமையும் இக்காலப்பகுதியிற் சிறந்த இலக்கியங்கள் உரு வாகக் காரணமாக அமைந்திருந்தன. இவ்வாறு தோன்றிய சங்ககாலத்து மக்களின் வாழ்க்கைப் பின்னணியை எடுத்துக் காட்டும் இலக்கியங்களையே சங்ககால மரபுவழி இலக்கியங்கள் என்று அழைக்கின்றனர;. அவற்றுள் இன்று நமக்கு 473 புலவர;களால் ஆக்கப்பட்ட 2381 பாடல்களே கிடைக்கப்பெற்றுள்ளன.
அவ்வாறு கிடைத்துள்ள சங்ககால இலக்கியங்களை எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்று இரண்டாக வகுத்துள்ளனர;. எட்டுத்தொகை தனிப்பாடல்களின் தொகுப்பாகவும், பத்துப்பாட்டு நெடும் பாடல்களின் தொகுப்பாகவும் அமைந்துள்ளன. சங்ககால நூல்களான அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குநுறூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை என்பன எட்டத்தொகை நூல்களாகும். திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பன பத்துப்பாட்டு நூல்களாகும். 
தமிழின் தொன்மைத் தன்மையை வெளிப்படுத்தி நிற்கும் சங்கப் பாடல்களை திணையிலக்கியம் என்றும் பெயரிட்டழைத்தனர;. இவற்றின் பாடுபொருளாகக் காதல், வீரம் என்பன அமைந்திருந்தன. இவற்றுள் காதல் பற்றிக் கூறும் இலக்கியங்களை அகப்பாடல்கள் என்றும் வீரம் பற்றிக் கூறும் இலக்கியங்களைப் புறப்பாடல்கள் என்றும் வகைப்படுத்தியுள்ளனர;. ஒருவன் ஒருத்திக்கு இடையே நிலவிய காதல் ஒழுக்கத்தைப் பெயர;சுட்டாமற் பாடிய பாடல்களே அகப்பாடல்கள் என்று அழைக் கப்பட்டன. பெயர; சுட்டிப் பாடப்பட்ட காதற் பாடல்களும் போர;, கொடை, வீரம், கல்வி, நட்பு, ஆட்சிச்சிறப்புப் பற்றிப் பாடப்பட்ட பாடல்களும் புறத்திணைப் பாடல்களாகக் கொள்ளப்படுகின்றன.
பண்டைத் தமிழ்மக்கள் தாம்வாழ்ந்த நிலப்பகுதியைப் புவியியல் அடிப்படையில் ஐந்து நிலங்க ளாக வகுத்தனர;. அந்த ஐவகை நிலங்களுக்குமுரிய இலக்கியங்கள் படைக்கப்பட்டபொழுதும் அவை தத்தமக்கென முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பவற்றை உடையனவாகவே அமைக்கப்பட்டன. அவ்வாறு கொள்ளப்பட்ட முதற்பொருளில் நிலமும் பொழுதும் முதன்மைப்படுத் தப்பட்டன. கருப்பொருள் பற்றிக்கூறும்போது தெய்வம், மக்கள், பறவை, விலங்கு, ஊர;, நீர;, பு+, மரம், உணவு, பறை, பண், யாழ், தொழில் என்பன கருத்திற்கொள்ளப்பட்டன. உரிப்பொருள் என்னும்போது ஐவகை நிலங்களுக்குமுரிய ஐந்து ஒழுக்கங்களாகிய புணர;தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் என்ற அகஒழுக்கங்களும், வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, என்னும் புறஒழுக்கங்களும் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளமையைக் கண்டுகொள்ளமுடிகிறது. இவைதவிர ஒருதலைக்காமம், பொருந்தாக்காமம் என்பனவும் கைக்கிளை, பெருந்திணை என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்துள்ளதைச் சங்க இலக்கியங்களில் ஆங்காங்கே கண்டுகொள் கிறோம்.
இந்த ஒழுங்குமுறையானது சங்கஇலக்கியங்களான அகத்திணை நூல்களில் இலக்கிய மரபாகவே பேணப்பட்டு வந்துள்ளமையை அவ்விலக்கியங்களிற் காணமுடிகிறது. மேலும் புலவர;கள் அகத்திணைப் பொருளைக் கூறும்போது கூறப்படும் இடம், காலம், சூழல் என்பவற்றுக்கு ஏற்பக் கூறுவதையே மரபாகக்கொண்டிருந்தனர;. அத்துடன் கூறவரும் செய்திகளைத் தன்கூற்றாகக் கூறாது தலைவன், தலைவி, பாங்கன், தோழி, செவிலி, நற்றாய் முதலியோர; கூற்றாகவே கூறிச் சென்றுள்ளமையையும் காணமுடிகிறது. 
இவ்வாறு பாடப்பட்ட பாடல்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே ஒவ்வொரு பொருள் குறித்துப் பாடப்பட்டனவாகவே அமைந்துள்ளன. அத்துடன் அவை கவித்துவம் கொண்டவையாக விளங்கிய துடன் பொருளை எளிதில் விளங்கிக்கொள்ளும் வகையில் எளிய நடையிலும் அமைக்கப்பட்டன வாகவும் இருக்கின்றன. 
சங்கச் செய்யுள்கள் சில வரையறைகளுக்கு உட்பட்டே புனையப்பட்டிருப்பதை நாம் கண்டு கொள்ளலாம். இன்ன பொருளை இப்படிப் பாடவேண்டும் என்ற மரபு பிறழாமல் சங்கப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன. இவ்வாறு ஒரு வரையறைக்குள் நின்று செய்யுட்கள் புனையப்பட்டாலும் பாடுவோர; தனித்திறனை ஒட்டி அவை சிறப்புற்று அமைந்ததோடு வேறுபட்டும் அமைந்திருந்தன. அன்று காதல், வீரம், போர;, கொடை,  நல்லாட்சி என்பன சங்கப் பாடல்களின் பாடுபொருளாகக் கொள்ளப்பட்டன. பாடல்களில் ஆங்காங்கே எளிமையான உவமைகளும், உள்ளுறை உவமைக ளும் பயன்படுத்தப்பட்டுள்ளமை சங்கப்பாடல்களின் சிறப்பிற்கு அணிசேர;ப்பதாக உள்ளது. 
இயற்கையின் பலவகைக் கோலங்களைச் சொற்சித்திரங்களாக உருப்படுத்திக் காட்டும் பேரறி வாற்றலைச் சங்கச் செய்யுட்களிற் காணலாம். அத்துடன் புறத்தே தோன்றும் காட்சிகளைச் செய்யுட்களிற் புனைந்து காட்டும் ஆற்றலிலும் அகத்தே தோன்றும் கருத்துகளை உணர;;;ச்சியும் மெய்ப்பாடும் புலப்பட உரைக்கும் ஆற்றல் சிறந்து காணப்பட்டது என்ற ஒரு கருத்தும் உள்ளது.
ஐம்பொறி உணர;விற்கு உட்பட்ட காட்சிப்பொருள் என்று கொள்ளப்படும் இயற்கைப்பொருள் களையும், மனஉணர;வால் அறியப்படும் கருத்துப் பொருள்களான அன்பு, வீரம் முதலிய பண்பு களையும் வெளிப்படுத்தும் செய்யுள்களாகச் சங்கச் செய்யுட்கள் காணப்படுகின்றன. இவற்றுள் கருத்துப் பொருளாகிய அன்பு வீரம் முதலிய பண்புகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளைக் கூறும் அகப்பொருள் அவர;களுடைய கவிமலரும் சோலையாக விளங்கியுள்ளது.
 
ஓத்த அன்பால் ஒரு தலைவனும் ஒரு தலைவியும் ஊழ்வினைப் பயன்கூட்ட ஒருவரையொருவர; விரும்பி இன்பம் உறுவதே அகமெனப்பட்டது. இவ்வாறு உணர;த்தப்படும் அகப்பொருளானது ஐந்து திணைகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் முதல், கரு, உரி என்று மூன்றாகச் செய்யுள்களில் கூறப்படும் வரயறையானது கவி அமைப்புக்கு உரியனவேயன்றி உலகியலுக்கு உரியனவல்ல என்பதைத் தொல்காப்பியரின் பின்வரும் அடிகளைக் காட்டிக் கூறுவாருமுளர;
    “நாடக வழக்கினு முலகியல் வழக்கிலும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்…”         
நாடக வழக்கென்பது சுவைபடவரும் எல்லாம் ஓரிடத்தில் வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல். அதாவது செல்வத்தாலும் குலத்தாலும் ஒழுக்கத்தாலும் அன்பினாலும் ஒத்த இருவர; தனி இடத்தில் சந்தித்துப் புணர;ந்து அதன்பின் களவொழுக்கம் நடத்தி மணந்தார; எனவும் எல்லாம் சேர;ந்து ஒன்றாக வருதல் உலகியல் வழக்;காவது உலகத்தார; நடைமுறை வாழ்வோடு ஒத்து வருவது எனப்பட்டது. சில நிகழ்ச்சிகள் உலகியலோடு ஒத்துவந்தபோதிலும் பெரும்பான்மை நாடக வழக்காகவே அமைகின்றன. இத்தகைய நாடகவழக்குக் கவிஞர;களால் கற்பனை செய்யப்பட்டுப் படிப்போருக்கு இனிமை பயப்பதாக அமைகின்றன என்பதைச் சங்ககால அகத்திணை இலக்கியங்களிற் கண்டுகொள்ளமுடிகிறது.
 
எனவே கவிகள் தமது கற்பனை ஆற்றலால் பலவகைச் சுவைபொருந்தக் காட்சிப் பொருளையும் கருதுபொருளையும், புனைந்து உரைத்து சிறுபான்மை உலகியலோடு பொருந்த நல்ல பொருளை
அமைத்துக் காட்டிய செய்யுட்களே இவ்வகப்பொருட் செய்யுட்கள். இச்செய்யுட்களில் கூறப்பட்டது போல் உலகியல் நிகழவேண்டுமென்று எந்த வரையறையும் இல்லை. அதனால் அவை உலகிய லுக்குப் புறம்பானவை என்று கொள்ளுதல் தவறாகும். அகத்திணைச் செய்யுள்களிலே காணப்படும் தலைவன் தலைவியரிடையே வளரும் அன்புநிலை அவர; இல்லறம் நடத்தும்முறை என்பன உலகியலைச் செம்மைப்படுத்தும் தன்மைகொண்டன. முதல், கரு, உரி என்னும் மூன்று வகைப் பொருள் வரையறையானது கவிச்சுவையை மிகுதிப்படுத்தவே தோன்றியதாகப்படுகிறது.
உலகத்தில் குறிஞ்சி நிலத்தவர;கள்தான் புணர;வார;கள், பாலை நிலத்தவர;கள்தான் பிரிவார;கள், முல்லை நிலத்தவர;கள்தான் தலைவரைப் பிரிந்து ஆற்றியிருப்பார;கள், மருதநிலத்தவர;கள்தான் ஊடல்கொள்வார;கள், நெய்தல் நிலத்தவர;கள்தான் இரங்கி வாடுவார;கள் என்ற வரையறை இருப்ப தில்லை. ஆனால் புலவர;கள் அமைக்கும் செய்யுள்களிலோ இவ்வரையறைகள் காணப்படுகின்றன. இதுவே நாடக வழக்காகும். நாடக அரங்கில் நிகழும் நிகழ்ச்சிக்கு ஏற்ற இடமொன்றை நாடகப் புலவன் அமைப்பது போன்றது இக்காட்சியமைப்பு. பிரிவை வெளிப்படுத்தவரும் ஆசிரியன் துன்ப உணர;ச்சியை அல்லது துன்பநிகழ்ச்சியை மிகுதிப்படுத்தவேண்டி இயற்கை நிகழ்ச்சிகளை ஏடுத்துக்காட்டி அதைத் தான்கூறும் நிகழ்ச்சியோடு தொடர;புபடுத்திக் காட்டுகிறான். 
 
கருப்பொருள் என்பது ஒவ்வொருவகை நிலத்தின் இயல்புகளையும் அறிந்து அமைக்கப்பட்டுள்ளன. அவை உலகியல்போடு ஒத்தும் காணப்படுகின்றன. மேலும் அந்தந்த நிலத்திற் காணப்படும் மரம், விலங்கு, பறவை என்பவற்றின் இயல்புகளை நன்றாக உணர;ந்தும் வெளிப்படுத்தப்பட்;;டுள்ளன.
 
உரிப்பொருள் என்று கூறும்போது புணர;தல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல் ஆகிய இவ்வைந்தும் இவற்றின் நிமித்தங்களும் ஆகும். இவ்வுரிப்பொருளே முதல், கரு என்ற இரண்டைக் காட்டிலும் சிறந்தது. பிற பொருள்கள் தம்முள் மயங்கினாலும் உரிப்பொருள் மயங்கக் கூடாது என்பது இலக்கணம். முதல் கரு என்ற இரண்டும் உரிப்பொருளாகிய நாடக நிகழ்ச்சிக்கு நிலைக் களனாக அமைகின்றன. காட்சிப்பொருள் வகையைச் சேர;ந்த முதல் கரு என்பவற்றைப் புலவன் அழகுற அமைத்துச் செய்யுள் புனையும் போது அக்காட்சி நம்மனதைக் கவர;கிறது. இதையே சங்ககால அகத்திணை இலக்கியங்களிற் காண்கிறோம்.
 
இவ்வாறு இலக்கண வரம்புக்குட்பட்டு விரிவும், சுருக்கமும் இல்லாது இயற்கைக் காட்சிகளின் அழகையும் அகனைந்திணையின் ஒழுக்கங்களையும் பண்டைக்கால நாகரிகச் சிறப்பையும்  வேறுபல அரிய பொருள்களையும் அழகுற விளக்கிக் கூறுவனவே சங்க இலக்கியங்களாகும். இந்தச் சங்க இலக்கியங்கள் ஊடாக அன்றைய குமுகாயம் சார;ந்த வாழ்க்கை நெறிமுறைகளை அறிந்துகொள்வதோடு கலை, பண்பாடு, நம்பிக்கைகள், அரசியல், பொருளாதாரம் என்பன பற்றியும் அறிந்துகொள்ள உதவும்; காலத்தின் கண்ணாடியான சங்ககால இலக்கியங்களை எமது இளம் தலைமுறைக்கும் கூறி அவர;களின் தமிழுணர;வு மேலோங்க வழிசெய்வோம்.
 
n சபா. அருள்சுப்பிரமணியம்
                           -------------------