சங்க இலக்கியத்தில் அகத்திணை - லீலா சிவானந்தன் -
   
   

 

சங்க இலக்கியத்தில் அகத்திணை
- லீலா சிவானந்தன் -
 
 
தென்மதுரை, கபாடபுரம், மதுரை ஆகிய இடங்களின் முச்சங்கங்கள் அமைந்திருந்தன என்றும் அவற்றின் முதலிரு சங்கங்களும் கடற்கோள்களால் அழிந்து போயின என்பதும் இதற்கு ஆதாரங்கள் பலவும் காட்டி தொல்காப்பியம், இறையனார; களவுரை போன்ற நூற்குறிப்புகளுடன் ராமாயணம், மகாபாரதம், அர;த்தசாத்திரம் மற்றும் அறிஞர; கருத்துக்கள் தொல்லியல் சாசனங்கள், தமிழர; இலக்கியச் சான்றுகள் பல காட்டி கடைச்சங்ககாலம் கி.மு. 500ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 300ஆண்டுகள் வரை என்று கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வரும் பதிய ஆய்வுகளையும் உள்ளடக்கி தம் கருத்தைக் கூறியுள்ளார;கள். தொல்காப்பியத்தின் உரையாசிரியர;களான பேராசிரியரும் நச்சினார;க்கினியரும் முச்சங்கங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர;. தலைச்சங்கம் தென்மதுரையிலும், இடைச்சங்கம் கபாடபுரத்திலும், கடைச்சங்கம் மதுரையிலும் இருந்ததாகக் கூறப்படுகின்றது.
முதற்சங்கத்திலே அகத்தியன், சிவன், முருகன் போன்றோர; புலவர;களாக இருந்தனர; என்று இறையனரர; களவியலுரை கூறும். மேலும் இடைச்சங்கத்திலே இருந்த பல புலவர;கள் பலர; இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளனர;.
இவ்வாறு முச்சங்கங்கள் இருந்ததை முழுமையாக உறுதிப்படுத்த முடியாவிட்டாலும் கூட பாண்டிய மன்னர;கள் தொடர;ந்து தமிழ்ச்சங்கத்தைப் பேணி வளர;த்தனர; என்று அறியக் கூடியதாகவுள்ளது. அத்துடன் கடைச்சங்க காலத்தில் பல இலக்கியங்கள் தோன்றின. அவ்வாறான இலக்கியங்களைக் கொண்டு அக்கால மக்கள் வாழ்க்கை முறை, சமுகவியல், அரசியல், கல்வி, பொருளாதாரம் போன்ற பல விடயங்களை அறிய முடிகின்றது.
கடைச்சங்க காலத்தில் எழுந்த நூல்கள் எட்டுத்தொகை, அவையாவன: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குநுறூறு, கலித்தொகை, அகநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துப்பாடல்களாவன திருமுருகாற்றுப்படை, பொருனராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம், மதுரைக்காஞ்சி, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு, நெடுநல்லாற்றுப்படை. சங்ககாலம் என்ற கூறப்படுகின்ற கடைச்சங்க கால கட்டத்தில் சேர சோழ பாண்டிய மன்னர; ஆட்சி செய்து வந்தனர; என்று அறியக் கிடக்கின்றது. குறுநில மன்னர;கள் கூட அரசாட்சி செய்து வந்தனர;. நன்னன் என்ற வேளிர; குல மன்னன் மலைபடுகடாம் என்ற நூலிற் பாட்டுடைத் தலைவனாக உள்ளான். அத்துடன் அக்கால அரசர;களில் பெரும்பாலானோரும் மக்களில் பலரும் வள்ளல் தன்மையடையவர;களாக விளங்கினர; என்று அறியக் கிடக்கின்றது.  
மாங்குடி மருதன் என்னும் அரசன் சங்ககாலத்தில் முதல் மன்னாக இருந்தான் என்றும் சங்கத்தின் தலைவனாக இருந்தான் என்று புறநானூறு கூறுவதில் அறிகிறோம்.
 
ஷஷஓங்கிய சிறப்பின் உயர;ந்த வேள்வி
மாங்குடி மருதன் தலைவனாக
உலகமொடு நிலை இய பலர; புகழ் சிறப்பின்
புலவர; பாடாது வரை என் நிலவறை’’
 
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் என்பவன் அன்னதான மடம் அமைத்து மக்களுக்கு உணவு வழங்கும் தொண்டு செய்து வந்தவன். இவன் இயற்றிய கவிதை ஒன்று அகநானூற்றில் இடம் பெற்றுள்ளது. (அகம் 168)
பெரும்பாலான அரசர;கள் நல்லவர;களாக, வல்லவர;களாக விளங்கினர;.
சங்க காலத்தின் கடைசி ஆண்டுகளில் ஆண்டவன் உக்கிரப்பெருவழுதி பாண்டியன். கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி என்று குறிப்பிடப்படுகின்றான். இந்த வழுதி என்பது பாண்டிய மன்னர;களைக் குறிப்பிடும் பெயராகும். உக்கிரப் பெருவழுதி தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் மகன் என்று ஆய்வாளர; கருதுகின்றார;கள். போரில் வீராவேசத்துடனும், கோபத்துடனும் போரிடும் ஆற்றல் உள்ளவன் என்பதால் இவனுக்கு உக்கிர என்ற அடைமொழி கொடுத்து உக்கிரப்பெருவழுதி என்று அழைத்தனர;. இவன் வேங்கை மார;பன் என்றும் அண்டை நாட்டு அரசனுடைய கானப்பேரெயில் வெற்றி கொண்டான் என்பதால் கானப்பேரெயில் கொண்ட உக்கிரப்பெருவழுதி என்று புகழப்படுபவன். இவன் காலத்தில் தான் திருக்குறள் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்று கூறப்படுகின்றது. அகநானூறைத் தொகுத்தவன் இவன் தான்.
முதுகுடுமி என்ற இயற்பெயரைக் கொண்ட கடைச்சங்க காலத்துக்கு முன்னர; வாழ்ந்த பாண்டிய மன்னன் மூத்த குடியினர; என்பதால் முதுகுடுமி என அழைக்கப்பட்டான். பல யாகங்கள் நடாத்திய காரணத்தால் பல்யாகசாலை முழுகுடுமிப் பெருவழுதி என்ற பட்டத்தினைப் பெற்றான். வழுதி என்ற பாண்டியன் என்ற குடிப்பெயரையும் இவன் பெற்றிருந்தான்.
இப்போது சங்ககால நூல்களைப் பார;த்தோமானால் சங்கப்பாடல்கள் பற்றிய ஒரு பாடல்.
 
நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குநுறூறு, ஒத்தபதிற்றுப்பத்து, ஓங்குபரிபாடல்கள் கற்றிந்;;தான் எத்தும் கவியோடு அகம்புறம் என்று இத்திறத்த எட்டுத்தொகை முருகுபொருநாறு பாணிரண்டு முல்லை பெருகுவள மதுரைக்காஞ்சி மருவினிய கோலநெடுநல்வாடை கோல் குறிஞ்சிப் பட்டினப்பாலை கடாத்தொடும் பத்து.
சங்க இலக்கியம் காட்டும் வாழ்க்கை முறை அகம் - புறம், காதல் - வீரம் என்ற இரு வகைப் பிரிவுகளின் கீழ் குறிக்கப்படுகின்றது. சங்கப் பாடல்களில் அகம் பற்றிய நூல்களே அதிகமாகக் காணப்படுகின்றன. இருவர; அன்பால் இணைந்து இன்பமாய் வாழும் வாழ்க்கை அகவாழ்வு. அகத்தே உணரும் உணர;வுகள் அகத்திணை என்று சங்க இலக்கியம் கூறும். அகப் பொருள் விளக்கம் ஏற்கனவே குறிக்கப்பட்டது. அகப்பொருள் ஐந்திணையாகப் பகுக்கப்பட்டு ஒவ்வொன்றும் முதல் கரு, உரி என்றும் மூவகையிலும் செய்யுளில் விவரிக்கப்படும். முதல் என்பன நிலமும் காலமும் கரு என்பது தெய்வம் முதலியன. உரியென்பது திணைக்குரிய ஒழுக்கங்கள் குறிஞ்சி நிலத்துள்ளோர; கூடலும், பாலை நிலத்துள்ளோர; பிரிவதும், முல்லை நிலத்தோர; ஆற்றுவதம், மருத நிலத்தோர; ஊடல் செய்வதும், நெய்தல் நிலத்தவர; இரங்குவதும் அகப்பொருள் மரபாக அமைந்தன. கைக்கிளை பெருந்திணை என்பதும் வழக்கிலிருந்தன.
 
 
ஷஷபோக்கெல்லாம் பாலை புணர;தல் நெடுங்குறிஞ்சி
ஆக்கம் அளி ஊடல் அணிமருதம், நோக்கு
ஓன்றி இல் இருத்தல் முல்லை இரங்கிய போக்கு
ஏர; நெய்தல், புல்லும் கவிமுறைக்கு ஒப்பு’’
 
இந்த மரபை, வரையறையை ஒட்டி இன்ன பொருளை இவ்வாறு அமைக்க வேண்டும் என்ற மரபு பிறழாமல் சங்க காலப் புலவர;கள் செய்யுட்களை இயற்றினர;. அவ்வாறான செய்யுட்கள் சொற்செறிவுடனும், பொருட்செறிவுடனும் சிறந்து விளங்கின. அவர;கள் காதலை ரசித்தார;கள். இயற்கையை ரசித்தார;கள். அதன் மூலம் நுண்ணிய மனவுணர;வுகளை அற்புதமாக வெளிப்படுத்தினார;கள்.
சங்கப் பாடல்களைக் கவனித்தால் அவை புலவர;கள் தாம் சொல்வதாகவோ அல்லது பாத்திரங்களின் பெயர; குறிப்பிட்டுச் சொல்வதாகவோ எந்தச் செய்யுளும் இல்லை. ஒவ்வொரு திணைக்கும் உரிய கதாபாத்திரங்கள் மூலமோ சம்பா‘ணை மூலமோ மன உணர;வுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாகப் பார;த்தோமானால் பாணன், கூத்தன், விறலி, அறிவர;, கண்டோர; மற்றும் தலைவன் - தலைவி, தோழி - தலைவன், தலைவி - தோழி போன்ற பலர; மூலமாகவே தகவல் பரிமாற்றம் நடக்கும். இன்னொரு வகையில் பார;த்தால் உலகியல் வழக்கத்துக்கும் நாடக வழக்கத்துக்கும் பொருந்தி வருமாறு பின்னப்பட்ட வாழ்க்கைக் களஞ்சியம். இவர;கள் காட்டும் இவ்வரையறைகள் புலவர;களால் இயற்றப்பெறும் கவி அமைப்புக்கு உரியனவேயன்றி. உலகியலுக்கு உரியனவல்ல. சில மட்டுமே உலகியலுடன் ஒத்துப்போகும்.
நாடக வழக்கிலும் உலகியல் வழக்கிலும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம் - தொல்காப்பியம் 
 
நாடக வழக்கு என்பது கவியின் சுவை காரணமாக கற்பனை செய்யப்பட்டு படிப்போருக்கு இனிமை பயப்பது. உலகியல் வழக்காவது உலகத்தால் ஒழுக்காற்றோடு ஒத்துவருவது. குறிஞ்சி நிலத்துள்ளோர; கூடலும் முல்லை நிலத்துப் பெண்கள் ஆற்றுவதும், மருதநிலத்தோர; ஊடல் கொள்வதும், நெய்தல் நிலத்தவர; இரங்குவதும், பாலை நிலத்தவர; பிரிவதும் அகப்பொருள் மரபாக அமைந்தன. ஆனால் சங்ககால அகப்பாடல் செய்யுட்களில் அந்த வரையறை காணப்படுகின்றது. அந்த வரையறைக்கமையவே அவர;கள் யாத்த செய்யுட்கள் சிறப்பு மிக்கதாக விளங்குகின்றன. முதல், கரு ஆகிய பொருட்கள் தம்முள் மயங்கினாலும் உரிப்பொருள் மயங்குதல் தகாது என்பது இலக்கணம்.
ஓரிரு உதாரணங்களை இப்போது பார;க்கலாம். நல்ல குறுந்தொகை என்று சிறப்பிக்கப்படுவது குறைந்த அடிகள் கொண்ட பாடலின் தொகுப்பு. ஆதலால் குறுந்தொகை எனப் பெயர; பெற்றது. 401 பாடல்கள் 206 புலவர;கள் பாடியுள்ளனர;. 1 பாடல் இடைச் செருகில் என்று கருதப்படுகின்றது. இதன் சிறப்பம்சம் கருப்பொருளை விட உரிப்பொருளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பத்துப் பாடல்களுக்கு ஆசிரியர; பெயர; தெரியவில்லை. 
 
 
குறுந்தொகையை ஷநல்ல குறுந்தொகை நானூறு’ என்று இறையனார; களவியலுரை கூறும் இந்நூலுக்குப் பேராசிரியர; உரை எழுதியுள்ளார;. பேராசிரியர; உரை எழுதாத பாடல்களுக்கு நச்சினார;க்கினியர; உரை எழுதியுள்ளார;.
ஷஷநல் அறிவுடைய தொல் பேராசான்
கல்வியும் காட்சியும் காசினி அறிய
பொருள் தெரிகுறுந்தொகை இருபர பாட்டிற்கு
இது பொருள் என்று அவன் எழுததாது ஒழிய
இரு பொருள் என்று அதற்கு குறிப்பு உணர;த்தும்’’
 
என்னும் பாடல் மூலம் இதை அறிய முடிகின்றது.
 
இதைத் தொகுத்தவர; பு+ரிகோ என்று அறியமுடிகிறது.
 
காடும் காடு சார;ந்த இடமும் முல்லை. செம்மண் பரந்திருப்பதால் முல்லை செம்புலம் எனப்பட்டது. இந்நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது. 
இதன் தெய்வம் - மாயோன்
மக்கள் - இடையர;, இடைச்சியர;, ஆயர;, ஆயச்சியர;.
உணவு - வரகு, சாமை
பறவை - காட்டுக்கோழி
விலங்கு - மான், முயல், பசு, மரை
நீர;நிலை - காட்டாறு, சுனைநீர;
மலர;கள் - முல்லை, படலம், தொன்றி
மரங்கள் - கொன்றை, குருந்தம், காயா
யாழ் - முல்லை யாழ்
பண் - முல்லைப்பண்
பறை - ஏறுகோட்பறை
தொழில் - சாமை வரகு விதைத்தல், களை எடுத்தல், குழலூதல், ஏறுதழுவுதல், குரவைக்கூத்தாடல், மந்தை மேய்நத்தல் கான்பாற்று நீராடல்
ஊர; - பாடி, சேரி, பள்ளி
பொழுது - கார;, மாலை
அக ஒழுக்கம் - இருத்தல்
புற ஒழுக்கம் - வஞ்சி
 
குறுந்தொகையில் இப்பொழுது ஒரு பாடலைப் பார;ப்போம்.
தோழி கூறியதாக வரும் ஒரு பாடல்:
 
முல்லை ஊர;ந்த கல் உயர;பு ஏறிக்
கண்டனம் வருகம் சென்மோ தோழி.
எல் ஊர;ச் சேர;தரும் ஏறுடை இனத்துப்
புல் ஆர;நல் ஆன் பு+ன்மணி கொல்லோ
செவ்வினை முடித்த செம்மல் உள்ளமொடு
வல்வில் இளையார; பக்கம் போற்ற
ஈர;மணற்காட்டாறு வரூஉம்
தேர;மணிசொல்? ஆண்டு இயம்பிய உளவே
ஓக்கூர; மாசாத்தியார;
 
தலைவன் கூறிச்சென்ற பருவம் வந்த காலத்து தோழி தலைவியை நோக்கி ஷஷமணி ஓசை கேட்கின்றது. பசுக்களின் கழுத்தில் கட்டிய மணியின் ஒலியா அல்லது வலிய வில்லை உடைய வீரர;கள் புடை சூழ்ந்து காவல்காக்க தான் சென்ற செயல் முடித்து வெற்றியுடன் காட்டு வழியிலே வருகின்ற தலைவனுடைய தேரின் மணியோசையோ என்று முல்லைச் கொடி படர;ந்த கல்லின்மேல் ஏறிநின்று பார;த்து வருவோம் வருவாயாக’’ என்று தோழி கூறுவது போல அமைந்துள்ள க்கூ மாசாத்தியாரின் பாடல் முல்லைநில வாழ்வின் ஒரு பகுதியையும் அவர; தம் மனவுணர;வையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது.
 
ஒக்கூர; மாசாத்தியார; சங்க காலத்தில் வாழ்ந்த மிகச் சில பெண் புலவருள் ஒருவர;. அவர; இயற்றிய இன்னுமொரு முல்லைத்திணைப் பாடல்:
 
 
ஷஷஆர;கலி ஏற்றொரு கார;தலை மணந்த
கொல்லைப் புனத்த முல்லை மென்கொடி
எயிறு என முகையும் நாடற்குத்
துயில் துறந்தனவால் தோழி - எம் கண்ணே
 
தோழி! இடியுடன் கூடிய மழை பெய்துள்ள முல்லை நிலத்து முல்லைக் கொடிகள் முகைவிட்டு அரும்பு மலர;கின்ற நாட்டையுடைய தலைவன் வராமையால் என் கண்கள் துயில் ஒழிந்தன என்று தலைவி தோழிக்குக் கூறுவது போல அமைந்த இப்பாடல் முல்லைநிலத்துக்குரிய இருத்தல் பற்றிச் சிறப்பாக எடுத்துக் கூறுகின்றது. பொருள் தேடி சென்றோர; போருக்குச் சென்றோர; மீண்டு வரும் வரை காத்து இருத்தல் முல்லைத்திணைக்குரிய உரிப்பொருளாகும்.
 
பாலைத்திணை கூறும் பல பாடல்களில் முப்பொருள் குறித்த வெளிப்பாடு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன. பாலைத்திணைக்குரிய அக ஒழுக்கங்களை உடன்போக்கு, நற்றாய் வருந்துதல், செவிலி மகளைத் தேடிச் செல்லல், தலைவியை ஆற்றுவித்தல், பிரிவு போன்ற நிகழ்வுகளை அறியலாம். இத்தகைய பாடல்களில் காணப்படும் சொல்லாட்சி உள்ளுறை உவமம் ஆகிய இலக்கிய நயங்களும் சிறப்பாக அமைந்துள்ளன.
 
பாலை ஒரு நிலப்பரப்பு அல்ல. முல்லை, குறிஞ்சி ஆகிய நிலங்கள் மழையின்றி வரண்டு தம் இயல்பு குறையும் பொது பாலை எனப்படும். இதற்குரிய சிறு பொழுது நண்பகல், பெரும் பொழுது - இளவேனிற்காலம், முதுவேனிற்காலம், பின்பனிக்காலம், தெய்வம் - கொற்றவை. மக்கள் - எயினர;, எயிற்றி, மறவர;, மறத்தியர;, காளை என்று கூறப்படுவர;. உரிப்பொருள் - பிரிதலும், பிரிதல் நிமித்தமும் 
 
வல்லோன் காலன கழலே தொடியோர;
மெல்அடி மேலவும் சிலம்பே நல்லோர;
யார; கொல்?  அளியர;தாமே - ஆரியர;
 
கயிறு ஆடு பறையின் கால்பொரக் கலங்கி
வாகை வெண் நெற்று ஒலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னியோரே.
 
தலைவனும், தலைவியும் இல்லம் நீக்கி உடன் போதல் உடன் போக்கு எனப்படும். இப்பாடலில் தலைவன், தலைவி இருவரும் உடன் போகும் காலத்தில் அவர;களைக் கண்டவர;கள் தம்முள்ளே கூறிக் கொள்ளும் கூற்றாக விளங்குகின்றது.  குறுந்தொகையில் உள்ள இந்தப் பாடல் பாலை தினைக்குரிய மறவர; வீரக்கழலும், மறத்தியர; சிலம்பும் அணியும் பழக்கம் உள்ளவர;கள். ஆடவன் காலில் கழல் உள்ளது. பெண்ணின் காலில் சிலம்பு உள்ளது. அவர;கள் வழக்கப்படி மணமான பெண் சிலம்பு அணிந்திருக்க மாட்டாள். ஆகவே இவர;கள் திருமணமாகாதவர;கள் உடன் போகின்றனர; என்பதை உணர;ந்து, உடன்போக்கர;களுக்கு நேரும் இடையு+றுகளை தம்முள்ளே பகிர;ந்து கொண்டு அவர;களுக்காக இரக்கம் கொள்கின்றனர; என்று கருத்தைத் தரும் பெருமானாரின் அழகிய பாடல் இது. இவ்வாறு சங்க இலக்கியம் கூறும் அகத்திணை பற்றிய பாடல்கள் ஆங்காங்கே விரவிக் கிடக்கின்றன.