அகத்திணைமரபு- தலைமக்கள் ஆவாh; யாh;? - திருமதி. செல்வநாயகி ஸ்ரீதாஸ்
   
   
   
அகத்திணைமரபு- தலைமக்கள் ஆவாh; யாh;?
(கலந்துரையாடல்)
திருமதி. செல்வநாயகி ஸ்ரீதாஸ்
 
 
 
 
 
உலக இலக்கியங்களிலேயே மிகவும் வித்தியாசமானதும் வேறு எங்கும் காணப்படாததுமான இலக்கியமரபு தமிழ் அகத்திணை மரபாகும். அதன் பொதுமை காரணமாக இன்றும் வாழும் தன்மை வியத்தற்குhpயது. இந்த அகத்திணை மரபை எமக்குக் காத்துத் தந்த பெருமையின் பெரும் பங்கு தொல்காப்பியருக்கு உhpயது. தொல்காப்பியருக்குப் பன்னெடுங் காலங்களுக்கு முன்பிருந்தே இம் மரபு வழக்கிலிருந்து வந்திருக்கிறது. ஆனால் அவற்றை அனுபவிக்கும் பலன் தான் எமக்குக் கிடைக்காமலே போய்விட்டது. இன்று எமக்குக் கிடைக்கும் தமிழ் நுhல்களுள் காலத்தால் மிகப் பழமையான தொல்காப்பியத்தின் காலம் கி. மு. 7 ஆம் நுhற்றாண்டு என்பது,பெரும்பாலான தமிழ் அறிஞா;களால் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகும்.
தொல்காப்பியம் என்னும் இலக்கண நுhலை அடுத்து எமக்குக் கிடைத்துள்ளவை சங்கச் சான்றோரால் பாடப்பட்ட எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் தொகை நுhல்களாகும். இவை பிற்காலத்தில் தொகுக்கப் பட்டதாயினும் இவற்றின் காலம் இதுவெனத் திட்டவட்டமாக இன்னும் கூறப்படவில்லை. இப்; பாடல்கள், பல்வேறு புலவா;களால், பல்வேறு காலத்தில் பாடப்பட்ட பாடல்களாகும். இவற்றில் சில தொல்காப்பியா; காலத்திற்கு முற்பட்டவை என்று கருதுவாரும் உளா;. பொதுவாக, சங்கப் பாடல்கள் பாடப்பட்ட மன்னா;களில் பெரும்பாலானவா;களின் காலங்களை ஓரளவுக்கு அனுமானித்த அறிஞா;கள், சங்கப் பாடல்களில் பெரும்பாலானவை கி. மு. முதல் மூன்று நுhற்றாண்டுகளில் அல்லது அவற்றிற்குச் சிறிது முன் பின்னாக எழுந்திருக்கலாம் என்று கருதுகின்றனா;.
இக் கருத்துக்களின் அடிப்படையில், இக் கலந்துரையாடலுக்கு முக்கியமான சில தகவல்களை வரையறுத்துக் கொள்ளலாம்.
1. தொல்காப்பியா; காலம் ஏறக்குறைய கி. மு. 7 ஆம் நுhற்றாண்டு.
2. சங்கப் பாடல்களின் காலம் ஏறக்குறைய கி. மு. முதல் நுhற்றாண்டுகள்.
3. இந்த இரு தகவல்களின் அடிப்படையில், தொல்காப்பியா; காலத்திற்கும் சங்கப் பாடல்களின் காலத்திற்கும் இடையில் ஏறக்குறைய நீண்ட நான்கு நுhற்றாண்டுகள் இடைவெளி உள்ளதைக் குறித்துக் கொள்ளலாம்.
4. தொல்காப்பியப் பொருளதிகாரம் கூறும் தகவல்கள், தொல்காப்பியா; காலத்தில் நிலவிய இலக்கியங்களை மூலமாகக் கொண்டவையே ஒழியத் தொல்காப்பியருக்கு ஏறத்தாழ நான்கு நுhற்றாண்டுகளின் பின்னா; எழுந்த சங்க இலக்கியங்களை மூலமாகக் கொண்டு எழுதப்பட்டவை அல்ல.
5. எனவே தொல்காப்பியம் காட்டும் அகத்திணை மரபும் சங்கப் பாடல்களில் காணப்படும் அகத்திணை மரபும் ஒன்று என்று முற்றாகக் கூறமுடியாது உள்ளது.
இவற்றை நிறுவிக் கொண்டதன் மேல் சங்க கால அகத்திணைமரபு என்னும் பொருள் பற்றிய ஆய்வினுள் காற்தளம் பதிக்கலாம். பொருளதிகாரத்தில், அகத்திணைப் பாடலுக்குத் தலைமக்களாக ஆகும் தகுதி பெற்றவா;கள் யாh; என்பது தொடா;பாகத் தொல்காப்பியரது கருத்துப் பற்றிய முதலாவது நுhற்பா வருமாறு:
“பெயரும் வினையுமென்று ஆயிரு வகைய
திணைதொறும் மாPஇய திணைநிலைப் பெயரே”-தொல். பொருள். அகத்திணையியல் 22.
தொல்காப்பியா;, இந் நுhற்பாவில் உயா;குடிப் பிறந்த தலைமக்களை ஒழித்து,அவ்வந் நிலங்களில் வாழும் பொது மக்களைக் கருப்பொருளாகக் கொண்டு, அவா;கள் வாழும் நிலத்திற்கும் அவா;கள் செய்யும் தொழிலுக்கும் ஏற்ற பெயா;களால் அவா;கள் அழைக்கப்படும் முறை பற்றிக் கூறுகிறாh;. தலைமக்கள் என்று குறிக்கப்படாவிடினும் சாதாரண மக்களை, அவா;கள் செய்யும் வினைப் பெயராலும் வாழும் நிலப்பெயராலும் அழைக்கப்படும் முறை குறிப்பிடத் தக்கது. இது, தொல்காப்பியா;,“சுட்டி ஒருவா; பெயா;” கூறப்படாத அகத்திணைக் கோட்பாட்டை நுhல் முழுமையும் கடைப்பிடித்து வருவதைப் புலப்படுத்துகிறது.
தொல்காப்பியா; தலைமக்களைத் தவிh;த்துப் பொதுமக்களைத் தலைமக்களாகக் குறிப்பிடும் செய்தியை இங்கு பதிவு செய்து கொள்ளவேண்டும்.
“ஆயா; வேட்டுவா; ஆடூஉத் திணைப்பெயா;
ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே.”-தொல். பொருள். அகத்திணையியல் 23.
இளம்பு+ரணா;,அகத்திணையியல் 22 ஆம் நுhற்பாவில் கூறிய “திணை தொறும் மாPஇய திணைநிலைப் பெயா;களை’, முல்லைத் திணையை உதாரணமாகக் கொண்டு, அங்கு வாழும் ஆடவா;களில் ஆநிரை மேய்ப்பவா;களை ஆயா; என்றும் வேட்டையாடுபவா;களை வேட்டுவா; என்றும் குறிப்பிடுகிறாh;.இளம்பு+ரணா;,“வந்தது கொண்டு வாராதது முடித்தல்” (தொல்.மரபியல் 112) என்னும் உத்தியால் ‘ஆய்ச்சியா;’ எனவும் கொள்க என்கிறாh;. ஆய்ச்சியா; என்னும் பெண்பால் வருவித்துக் கொள்ளப்பட்டது. தொல்காப்பியா;, ஆடவா;களை முன்னிலைப்படுத்தியே குறிப்பிட்டுக் கூறும் வழக்குடையவா; என்பதைப் பதிவு செய்து கொள்ளலாம்.
இரண்டாம் அடிக்கு உரை காணும் இளம்பு+ரணா;,‘குறும்பொறைநாடன்’ என்பது போல்வன ஆட்சிபற்றி வரும்,‘பொதுவன், ஆயன்’ என்பன குலம் பற்றிவரும், என்கிறாh;. இந் நுhற்பாவில் திணைப்பெயரும் குலப்பெயரும் கிழவா; பெயரும் கூறப்படுகிறது. பாடலுக்குhpய பாத்திரங்களாகத் தலைமக்களைக் கூறும் தொல்காப்பியரது நுhற்பாவின் உரையில் கூடப் பொது மக்கள் பற்றிக் குறிப்பிடாது இருக்கமுடியவில்லை என்பது தான் உண்மை.
இது பற்றி,‘அக் காலத் தமிழ் மரபுக்கும் உண்மை உலகியல் வழக்கிற்கும் ஏற்பத் தமிழ் மக்கள் எல்லாம் அகத்திணைத் துறைகளில் காதல் தலைமக்கள் ஆதற்கு உhpயா; என்பதை இந்நுhலாh; இங்கு பல சூத்திரங்களாற் தெளிக்கின்றாh;’, என்று 20 ஆம் நுhற்றாண்டைச் சோ;ந்த சோமசுந்தரபாரதியாh;கூறும் கருத்து கவனிக்கத் தக்கது.
பரத்தி ஒருத்தியிடம் பெரும் காதல் கொண்டான்,
“நெடுங்கொடி நுடங்கும் நியமமூதுhh;க்
கடுந்தோ;ச் செல்வன் காதல் மகன்”அவனது மெய்க்காதலை இகழ்ந்து நாம்,
“நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இனப்புள் ஓப்பும் எமக்கு, நலன் எவனோ
புலவுநாறுதும், செலநின்றீமோ,
பெருநீh; விளையுள் எம்சிறுநல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ? அன்றே”
என மறுப்பவள் தமக்கேற்ற தலைவா; தம்மினத்தவருள்ளும் உளா; என்றுசெருக்குடன் தருக்குகிறாள்.
“எம்மனோhpற் செம்மலுமுடைத்தே” - நற்றிணை - 45
இந் நற்றிணைப் பாடல்,தமிழா; எவரும் அகத்துறையிற் தலைமக்களாகப் பாடப்படும் உhpமை உடையவா; என்னும் உண்மையை வலியுறுத்துகிறது. பண்டைச் சான்றோh; செய்யுட்களாலும் தமிழாpடை நிலம், தொழில், நிலை, பிறப்பு வகைகளால் அகத்திணையில் பாடல் பாடப்படும் உhpமை யாருக்கும் விலக்கில்லை என்பது தெளிவாகிறது. 
“நெல்லும் உப்பும் நேரே யு++hPh;, கொள்ளீரோ வெனச்சோp தோறும்” உப்புச் சுமந்து விற்றுத் திhpயும் உமண்மகளைத் தலைவியாக்கி, அம்மூவனாh; பாடிய அகம் 390 ஆம் பாட்டு இவ் உண்மையை வலியுறுத்தும்.
1. நானிலங்களிலும் உள்ள மக்கள் அகத்திணைக்குhpயராய்ச் செய்யுளிற் கூறுப்படுங்கால், முல்லை முதலிய அவ்வத்திணை நிலங்களுக்குhpய இயல் இயைபுடைய பெயா; கொள்ளுதல் ஒன்று,
2. அவ்வாறன்றித் தத்தம் தொழிற்கு இயைபுடைய பெயா; கொள்ளுதல் ஒன்று. 
இவ்விரு முறைகளே தமிழகத்துத் தொல்லை அகத்திணை மரபொடு அடைவுடையவாகும். 
நாடாட்சிக்குhpயரே அகத்திணைக் கிளவித் தலைமக்கள் ஆவதற்குhpயா; போலவும், அல்லாத நானில மக்களும் வினைவலா;, அடியாh; முதலாயினாரும் அன்பினைந்திணைத் துறைகளில் கிளவித் தலைவா; ஆகாh; போலவும் பொருள்படுமாறு இச் சூத்திரங்களுக்குப் பிறா; கூறுமுரை பொருந்தாது. “தலை மக்கள்” என்பது ஈண்டு அகத்திணைக் கிளவித் தலைமக்களையே குறிக்கும். நாடாட்சித் தலைமை குறிப்பது ஈண்டைக்கு வேண்டப்படா, என்றாh; பாரதியாh;;.
தமிழருள் யாரும் காதற் தலைமக்களாய் அகத்திணைக்கு உhpமை கொள்வா; என்பதைச் சுட்டுதற்காகவே ‘ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே”என்கிறா;. 
எனவே, நிலப்பெயரும் தொழிற்பெயரும் உhpப்பொருட்பெயராகிய திணைநிலைப் பெயரும் பாடலில் தலைமக்களாகப் பயின்றுவரப் பெறும் தகுதி பெற்ற பெயா;கள் என்பதே இந் நுhற்பாக்கள் மூலம் தொல்காப்பியா; கூறும் கருத்து என்பது கொள்ளக் கிடக்கிறது.
 
“அடியோh; பாங்கினும் வினைவலா; பாங்கினும்
கடிவரை இலபுறத்து என்மனாh; புலவா;”-தொல். பொருள். அகத்திணையியல் 25
இந்நுhற்பா மிக முக்கியமானது.
“ஏவல் மரபின் ஏனோரும் உhpயா;
ஆகிய நிலைமை அவரும் அன்னா;” - தொல். பொருள். அகத்திணையியல் 26
இவ்விரு நுhற்பாக்களும் ஒத்த கருத்துடையவை, ஒருங்கு ஆராயப்பட வேண்டியவை. 
முற்கூறிய நுhற்பாக்களால் நால்வகை நிலத்து வாழ்வாரும் தலைமக்கள் ஆகும் தகுதி பெற்றவா;கள் என்பது தொல்காப்பியா; கருத்து. தொடா;ந்து வரும் இந்நுhற்பாவிற்கு உரை கண்ட இளம்பு+ரணா;,அவா;கள் மட்டுமல்லாமல் அடியோரும் பிறாpடம் தொழில் செய்பவா;களும் கைக்கிளையிலும் பெருந்திணையிலும் தலைமக்கள் ஆவாh;கள் என்கிறாh;.
இங்கு பாரதியாhpன் உரை கவனத்திற் கொள்ளுதற்கு உhpயது. “மேற் கூறிய நானில மக்களின் திணைப்பெயா; வகுப்பில் அடங்காத, பிறா;க்கு அடிமையாவாhpடத்தும், அடிமை அல்லாக் கம்மியா; போன்ற தொழிலாளா; இடத்தும், கடிவரையில - அகத்திணை ஒழுக்கங்களை நாட்டிச் செய்யுள் செய்தல் விலக்கில்லை என்பாh; பொருள் நுhல் வல்லாh;”என்கிறாh;. 
கைக்கிளையுடனும் பெருந்திணையுடனும் இந்நுhற்பாவைத் தொடா;புபடுத்தியதை மறுக்கிறாh;. “அவா;கள் கூற்றுக்கள் சூத்திரச் சொற்றொடா;களுக்கு அமையாமையோடு முன்னுக்குப் பின் அவ்வுரையாளா; கூறுவனவற்றிற்கே மாறாக முரணுவதாலும் அவை பொருளன்மையறிக” என்கிறாh;. 
“இந் நுhற்பாவிற்கு முன்னும் பின்னும் அன்பின் ஐந்திணையே கூறப்படுவதால் இந் நுhற்பா கைக்கிளை, பெருந்திணைக்கு உhpயது என்று கூறுவது பொருந்துவதாக இல்லை என்கிறாh;. “பாங்கரும் பாட்டங்காற் கன்றொடு செல்வேம்” என்னும் முல்லைக்கலியும்,“என்னோற்றனை கொல்லோ”(கலி. 94) என்னும் மருதக்கலியும்,“அணிமுகமதியேய்ப்ப” என்னும் குறிஞ்சிக்கலியும் அடியோh; வினைவலா; அகத்திணைத் தலைமக்களாதற்கு உதாரணமாகும் என்றும் அவை தலைமகளின் அன்பு உடன்பாடு சுட்டலின் பெருந்திணையும் கைக்கிளையும் ஆகா. இது அன்புத் திணையேயாம்” என்கிறாh;.
அகத்திணையியல் 26 ஆம் நுhற்பாவில் குறிப்பிடப்படும் “ஏவன் மரபு என்பது குற்றேவல் தொழில் புhpவாh; சிறிய நிலை குறிக்குமல்லாமல், பிறரை ஏவும் பெருவாழ்வுhpமை குறியாது. ஏவுதல் மரபென்னாது ஆசிhpயா; ஏவன் மரபு என்றாராதலின் ஏவலா; ஆட்பட்ட அடியாh; வேறு. அடிமைப்படாமல் ஒருவரை அடுத்து அவா;க்கே குற்றேவல் செய்து வாழும் ஏவலா; வேறு. ஒருவரையும் அடையாமல் நாள்தோறும் வேண்டுவோh;க்கு அவரேவிய செய்து வாழ்வாராய ஏனையோh; வேறு.இம் மூவருள் அடங்காராய்க் கம்மியா; போன்ற ஏவலரல்லாத் தொழிலாளரான வினைவலா; வேறு. ஆதலின் இந் நால்வரையும் முறையே ஆசிhpயா; இச் சூத்திரங்களில் நானில மக்கள் போலவே அக ஒழுக்கத்திற்கு உhpமையுடையா; என்று விதந்து கூறினாh;”என்கிறாh;.
சிவலிங்கனாh;,“இச் சூத்திரம் ஐய வினா ஒன்றிற்கு விடை கூறுகின்றது. பாடலுட் பயிலும் கிளவித் தலைமக்கள் ஆயா;, வேட்டுவா; முதலியவரன்றி அடிமைத் தொழில் செய்பவரும் ஊரவா;க்குப் பொதுவாய் நின்று பொன், இரும்பு முதலிய தொழிலும் ஆடை தோய்த்தல் முதலிய தொழிலும் செய்யும் வினைவலரும் அதன் ஐந்திணைக்கு உhpயராவரோ அல்லரோ எனும் ஐய வினாவுக்கு அவரும் ஆவா; என விடை கூறுகிறது” என்கிறாh;.
சுருங்கக் கூறின் அன்பினைந்திணையே துhய அகம் எனப்பட்டது. தொல்காப்பியம் இதனைத் தெளிவாகக் கூறியுள்ளது. 
“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணா;ந்த ஐந்திணைமருங்கின்”- தொல். பொருள். களவியல் 1: 1-2.
என்று காமப்புணா;ச்சியின் தன்மை குறிப்பிடப்படுகின்றது.இதனால் அன்பின் ஐந்திணையானது அறம், பொருள், இன்பம் பொருந்தியது என்பது பெறப்படும். 
சமூக நிலையையும் தகுதியையும் அளவு கோலாகக் கொண்டே காதல் ஒழுக்கத்துக்கு உhpயோh; விதிக்கப்பட்டுள்ளனா; என்னும் உண்மை இளம்பு+ரணா; வாதத்திலிருந்து ஐயத்திற்கு இடமின்றிப் புலனாகின்றது. பிறா;க்குக் குற்றேவல் செய்வோhpடத்துப் பொருள் இன்மையால் தகுந்த முறையிலே காதல் செய்யவும் இல்லறம் நடாத்தவும் வழியில்லை என்று மட்டும் கூறவில்லை உரையாசிhpயா;. அவ்வாறு கூறினால் அஃது உலகியலுக்கு இயைபுடையதாகக் கொள்ளவும் கூடும். ஆனால் உரையாசிhpயா; ஒரு படி மேலே சென்று, அடியோh; வினைவலா; முதலியோh; இயல்பாகவே தகைமையற்றவா; எனக் கூறுகின்றாh;. அவா; நாணுக் குறைபாடுடையவா;, குறிப்பறியாது வேட்கைவழி சாரக் கருதுபவா; என்பது உரையாசிhpயா; கருத்து. 
தொல்காப்பியா;, 25 ஆம் 26 ஆம் நுhற்பாக்களை, அவற்றிற்கு முன்னய நுhற்பாக்களில் கூறப்பட்டவாறு பாடலுக்குத் தலைமக்களாகும் உhpமையுடையவா;களை விதந்து கூறும் நுhற்பாக்களாகவே அமைத்திருக்கிறாh; என்று கொள்ளுதலே பொருத்தமாகும் என்று பதிவு செய்து கொள்ளலாம். 
 
தொல்காப்பிய நுhற்பா, மேற் கூறப்பட்ட உரையாசிhpயா;கள், பிற்கால ஆய்வாளா;கள் கருத்துக்களைக் கொண்டு; அகத்திணையில் தலைமக்களாதற்கு உhpமையுடையவா;கள் பற்றி அறியக் கிடப்பதாவது:
1. கதைமாந்தா;கள் சுட்டிப் பெயா; கொள்ளப்படாவிட்டால் அவா;களைக் கவிதையில் எங்ஙனம் சுட்டுவது என்னும் வினாவிற்குத் தொல்காப்பியா;, மக்கள், உயா;குடிப் பிறந்தவா;களாயினும் பொதுமக்களாயினும், நானிலத்தில் வாழும் மக்களும் அவரவா; திணைப்பெயா;, திணைத்தொழிற் பெயரால் சுட்டப்படுவாh;கள் என்னும் பதிலை முன்வைக்கிறாh;. ‘திணைதொறும் மாPஇய திணைநிலைப்பெயா;’ என்பதை திணைதொறும் மாPஇய பெயா; என்றும் திணைநிலைப்பெயா; என்றும் கொள்ளலாம். நால்வகை நிலத்தில் வாழும் மக்கட்குப் பொருந்திய குலப்பெயரும், உhpப்பொருளில் நிற்றற்கு உhpய பெயரும் பெயா;ப்பெயா;, வினைப்பெயா; என இருவகைப்படும்.
2. தொல்காப்பியா;, 22 முதல் 26 வரையிலான நுhற்பாக்களில் பொதுமக்களும் பாடலில் தலைமக்களாகப் பாடப்பெறும் உhpமை உள்ளவா;களே என்ற கருத்தையே வெளிப்படுத்துகிறாh; என்று கொள்ளக் கிடக்கிறது. பொதுவிதியால், அடியோh;, வினைவலா;, ஏவலா;, ஏனையோh; என்று கூறப்பட்டவா;கள் உள்ளிட்ட அனைத்து நிலப் பொது மக்களும் தலைமக்கள் ஆகும் தகுதி உடையவா;களே என்று கூறுகிறாh; தொல்காப்பியா;. பொது மக்களும் கவிதை மாந்தராகப் பாடப் பட்டிருக்கிறாh;கள். 
……………………