காலம் கடந்தும் திருக்குறள் திரு.குணரட்ணம் இராஜகுமார்+
ஓதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதாகி வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றோர் உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு மாங்குடி மருதனார்
இரண்டே வரிகளில் ஏழ் சீர் கொண்ட ஒவ்வொன்றிலும் அரிய கருத்துகளாய் அமைந்த 1330 குறள்கள். கற்றிட எளியவை அரிய பொருள் பொதிந்தவை என்பது மிகையில்லை
எல்லாப் பொருளும் இதன்பால்உள இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால் - சொல்லால் பரந்த பாவால் என்பயன் வள்ளுவனார் சுரந்தபா வையத் துணை – மதுரைத் தமிழ் நாகனார்
எல்லாப் பொருளும் இதன்பால் உள என்பது மிகை போல் தோன்றினாலும். இந்த உரைக்காக, இதைப் பற்றி வள்ளுவர் கூறியிருக்கிறாரா என்று தேடிப்பார்த்த பொழுது. அனைத்துமே இருந்தன.
எனக்குத் தமிழிலே ஈடுபாடு வருவதற்கு திருக்குறள் ஒரு முதன்மைக் காரணம். இந்த உரை நிகழ்த்தும் வாய்ப்பிலே இரண்டு காரணங்களுக்காக திருக்குறளைக் கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்தேன். முதலாவது, திருக்குறளை மேலும்கற்பதற்குஏற்றவாய்ப்பாகவும். இரண்டாவது, இந்த உரையின் மூலம் என்னைப் போல் யாரேனும் திருக்குறள் பாலும் தமிழ் பாலும் ஈடுபாடு கொள்ளமாட்டார்களா என்றஒருநப்பாசை.
சரி, இப்பொழுது காலம் கடந்தும் நிற்கும் திருக்குறளுக்குள் செல்வோம். இன்று வேலைத்தளங்களும் அனைத்திலும் soft skills அதாவது மென் திறங்களுக்கு முதன்மை கொடுக்கிறார்கள். ஒருவர் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு இவை இன்றியமையாதவையாகின்றன.
ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டுமெனில், செயற்கரிய செயல்களைச் செய்யவேண்டும்.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
ஏற்கனவே பலரும் நடந்த, செப்பமிடப்பட்ட பாதையில் நடப்பதே எளிதானது, ஆயினும் புதிய பாதை அமைத்து செல்பவர்கள் தானே பெயரையும் புகழையும் நாட்டுகிறார்கள். இன்றுஉலகம்போற்றும்பெரியோரைஎடுத்துக்கொண்டால்அனைவரும்செயற்கரியசெய்தவர்களே.
இந்தக் குறளின் அடுத்த பகுதியை எடுத்துக் கொண்டால் சிறியர் செயற்கரிய செய்கலா தார் என்று உள்ளது. ஆனால், இன்று பல அறிஞர்கள் சிறியர் செயற்கரிய செய்கலா தார் என்று திருவள்ளுவர் எழுதியிருக்கமாட்டார். எனெனில், செயற்கரிய செய்கலா தார் எனின் உலகில் பலரும் சிறியர் என்ற பிரிவுக்குள் தான் அடங்குவார்கள். ஆகையால் திருவள்ளுவர் அப்படி எழுதியிருக்கமாட்டார், செயற்குரிய, அதாவது ஒருவன் எளிதாகச் செய்யக்கூடியவற்றை கூடச்செய்யவில்லைஎன்றால்தான்சிறியோர்என்றுதான்எழுதியிருப்பார்என்பதேஎனக்கும்சரிஎன்றேதோன்றுகின்றது.
செயற்கரிய செய்கிறோம் என எடுத்தோம் கவிழ்த்தோம் எனவும் செய்யக் கூடாது.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
ஒரு செயலைத் தொடங்கு முன் நன்கே சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். செய்வோம் என முடிவெடுத்து விட்டு பிறகு சிந்திக்கலாம் என எண்ணுவது அழகல்ல. அதற்கும் ஒருபடி மேலே சென்று, அவ்வாறு எண்ணியதை எண்ணியவாறே பெறுவீர்கள் உறுதியுடன் இருந்தால் என்றும் கூறுகிறார் திருவள்ளுவர்:
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின் (666)
“உறக்கத்தில் வருவதல்ல கனவு, உன்னை உறங்க விடாமல் செய்வது தான் கனவு” என்ற தாரக மந்திரத்தை இளையோர் மனதில் விதைப்பவரான முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவராகத் திகழந்த டாக்ரர்ஏ.பி.ஜேஅப்துல்கலாம் இந்தக்குறளைத்தான்தனதுவாழ்க்கைக்குஅத்திவாரமாகத்திகழ்ந்தகுறள்என்பார். அத்திவாரம் இல்லாது ஒரு கட்டடம் கட்டமுடியாது, அதேபோல எண்ணமில்லாது செயலும் இல்லை வாழ்விலே வெற்றியும் இல்லை.
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
துன்பதிற்கே துன்பத்தைக் கொடுத்துவிடுவர். யார்? துன்பத்தினால் துன்பம் கொள்ளாதவர். என்ற குறளை தனது வாழ்க்கைக்கு அச்சாணியாக இருக்கும் குறள் என்று கூறுவார் டாக்ரர் அப்துல் கலாம். வண்டிக்கு அச்சாணி இருந்தால் தானே, வண்டியால் முன்னோக்கிச் செல்ல முடியும், அதே போல, துன்பம் வரும்பொழுது துவண்டு விடாது இருந்தல் தானே இலக்கை நோக்கி வெற்றிநடை போட முடியும்.
இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்துஊர்வது அஃதுஒப்பது இல். (621)
இதற்கு ஒரு நகைச்சுவை சொல்வார்கள், ஆசிரியர் வகுப்புக்குப் போகும் பொழுதெல்லாம் ஒரு மாணவர் சிரித்துக் கொண்டிருந்தானாம். ஆசிரியர் கேட்டார் ஏன் சிரிக்கிறாய் என்று. அவன் சொன்னான், நீங்கள் தானே கூறினீர்கள் துன்பம் வரும்போது சிரிக்கச் சொல்லி என்று. நகைச்சுவைஒருபுறம்இருக்க; பின்வரும் திரைப்படப் பாடல் வரிகளைப் பார்ப்போம்.
துன்பம் வரும்போது
என்று திருக்குறளில் கூறியது சரியா என்ற கேள்வியை முன் வைக்கிறார் கவிஞர்? இப்படி வினாவுவதற்கு உரிமை இல்லாமல் இல்லை, ஏனெனில் அந்த உரிமையை எங்கள் ஐயன் வள்ளுவனே கொடுக்கிறாரே.
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
என்று பகுத்தறிவுக்கு வித்திட்டவரே எங்கள் வள்ளுவர் தானே.
சரி, இந்தத் திரைப்படப் பாடலில் கேட்ட வினாவுக்கு வருவோம். இடுக்கண்வருங்கால்நகுதல்என்பதுகடினமானதுதான். பாம்புகடித்தால்பெரும்பாலானவர்கள்பதறவேசெய்வார்கள். இந்தத்தருணத்தைப்புன்முறுவலோடுஎதிர்கொண்டு, பாம்பு கடித்த இடத்திலே துணியை இறுக்கிக் கட்டி இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தி ஒரு மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றால் காப்பாற்றலாம் என்பது உண்மைதானே. இதை நன்கறிந்து தான் இடுக்கண் வருங்கால் நகுக என்று வள்ளுவர் சொன்னார்.
சரி, செயற்கரிய செய்யும் எண்ணம் இருக்கிறது. எண்ணியதை துணிந்து செய்யும் திண்ணம் இருக்கிறது. செய்யுங்கால் வரும் துன்பதினால் துவண்டுவிடாத உறுதி இருக்கிறது. இவை மட்டும் போதுமா?
இன்றைய காலகட்டத்தில் எந்தத் துறையை எடுத்தாலும் செயற்றிட்டம் என்பது முக்கிய இடம் பெறுகின்றது. பலரும் அது வளரும் அறிவியல் உலகின் வெற்றிக்கு வளம் சேர்ப்பதற்கு இன்றியமையாது என்று அறிந்து, செயற்றிட்டத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை முறையாகக் கற்றுத் தேர்ச்சி பெற்றவர்களையே செயற்றிட்டத்திற்கு மேலாளர்களாக அமர்த்துகிறார்கள். இன்று செயற்றிட்டங்களுக்கு எவற்றைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்று கூறுகின்றார்களோ, அவற்றை 2000 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டார் திருவள்ளுவர்.
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
எந்த ஒரு செயற்றிட்டத்தை எடுத்துக்கொண்டாலும், ஏன் ஒரு புதிதாக வணிக நிறுவனத்தைத் தொடங்குகிறீர்கள் என்றாலும். இவை அனைத்தும் முக்கியம் தானே. எடுத்துக்காட்டாக ‘Tim Hortons’ ஐ எடுத்துக்கொள்ளுங்கள். பொருட்கள் தேவை விளங்குகிறது, கருவிகள் தேநீர் ஆக்க, உணவுகள் ஆக்க, பணம்பெற என்று கருவிகள் தேவை அதுவும் விளங்குகின்றது. 24 மணிநேரமும் இயங்கும் இடம் எனின், காலத்திற்கு என்ன வேலை என்று எண்ணத் தோன்றும். முதலாவது, அனைத்து ‘Tim Hortons’ உம் 24 மணி நேரம் இயங்குவதல்ல. அத்தோடு24 மணிநேரமும் ஒரே எண்ணிக்கையான பணியாளர் தேவைப்படுவதில்லை. அதைத் தெரிவு செய்யவும் காலம் தேவைதானே? அடுத்து வினை, வழமையாக செய்யும் செயல்கள் மட்டுமல்லாது, புதிய சிற்றுண்டி வகையை அறிமுகப் படுத்த வேண்டிய செயல்களும் இந்த வினைக்குள் அடங்கும். அடுத்தது இடம், இதன் இன்றியமையாமை பற்றி நான் கூறித் தெரியவேண்டியதில்லை. இவற்றை இருள்தீர எண்ணிச் செய்யச் சொல்லியிருக்கிறார்.
இன்றைய காலகட்டத்தில் செயற்றிட்டங்கள் தோல்வியடைவதற்கு, commission (தவறு செய்தல்) and omission (செய்வன செய்யாமை) என்பவற்றை முதன்மைக் காரணமாகக் குறிப்பிடுவார்கள். இதைத் திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார்:
செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும். இதை இன்றைய அரசியல் வாதிகளுக்கும் பொருத்திவிடலாம், ஊழல் செய்தாலும் கேடுதான், மக்களுக்கு செய்ய வேண்டியன செய்யாவிட்டாலும் கேடுதான்.
கூடுதலான செயற்றிட்டங்கள் ஒருவர் செய்யக் கூடியன அல்ல, அதனால் வேலைகளை பகிர்தளிக்க வேண்டிய அதாவது Delegation செய்ய வேண்டிய கடப்பாடு செயற்றிட்ட மேலாளர்களைச் சாரும். இது, பல மேலாளர்களுக்கு பெரும் சிக்கலான ஒன்று. அதாவது delegation செய்வதற்குப் பதில் micro management (அணுக்க மேலாண்மை) செய்வார்கள். ஆனால், திருவள்ளுவர் இதனை மிக அழகாக விளக்குகிறார்:
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
இதனை – பகிர்ந்தளிக்கப் படும் செயலை இதனால் – இன்ன காரணத்தல், இன்ன கருவிகளால் இவன் – வேலை பகிர்ந்தளிக்கப் படுகின்றவனால் முடிக்க முடியும் என்பதை அறிந்து அதனை அவனிடம் விட்டு விடல் வேண்டும் என்று கூறுகின்றார். என்ன ஒரு தெளிவு.
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் நீங்காதத் துன்பத்தைக் கொடுக்கும்.
இன்று Swot analysis என்பது செயற்றிட்டத்திலோ, புதிய வணிகத் தொடக்கதிலோ பயன்படுத்தபடும் ஒரு உத்தி ஆகும். அதாவது Strength (பலம்), Weakness(பலவின்மை), Opportunity (வாய்ப்பு), Threat(அச்சுறுத்தல்) என்பவற்றைஆராய்ந்துமுன்னெடுக்கவேண்டும்என்றகொள்கையையேஇதுவலியுறுத்துகிறது. Swot analysis க்கான விக்கிப்பிடியாப் பக்கத்திலே,So it is said that if you know your enemies and know yourself, you can win a hundred battles without a single loss. If you only know yourself, but not your opponent, you may win or may lose. If you know neither yourself nor your enemy, you will always endanger yourself” என்று Sun Tzu’s The Art of Warஐ மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். இதைவிடச் சிறப்பாக, வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்.
எனத் திருக்குறளில் இருக்கிறது என்பதே உண்மை.
Listening
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
என்ன ஒரு அருமையான கருத்து. சொல்லுவது concise (சுருக்கம்) and precise(துல்லியம்) ஆக இருக்க வேண்டும். அதனால் தான், தனது திருக்குறளை அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தறித்த குறளாக அமைத்திருக்கிறார்.
முப்பாலில் இருபாலை மட்டுமே கூறினால் முழுமையடையாது. அதுமட்டுமல்ல, எனது மனைவி சிலவேளைகளில் கேட்பதுண்டு, நீங்கள் காதலிக்கும் பொழுது ஒரு கவிதையாவது கூறியிருக்கிறீர்களா? என்று. வள்ளுவர் தந்த முப்பாலில் இருபாலே இளையோருக்குப் போதுமானது என்று நான் இருந்துவிட்டதே அதற்குக் காரணம். இளையோரே ஏன் பெரியவர்கள் கூட சிறந்த காதல் கவிதை எழுத வேண்டுமெனின் திருவள்ளுவரின் மூன்றாம் பாலையும் பருகுங்கள். எடுத்துக்காட்டுக்கு ஒரே ஒரு குறள்,
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல (1100)
இதை நான் ஏன் கவிதை கூறவில்லை என்பதற்கு காரணமாகக் கூட இப்பொழுது சொல்லிக் கொள்ளலாம் J
கண்கள் பேச ஆரம்பித்து விட்டன வாய் பேச்சால் என்ன பலன்
ஆம், வாயை மூடி சும்மா இருந்தேன் கவிதை கூற மறந்தேன்.
இதைத் தான் கம்பன் “அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்” என்பார். அதைத்தான் இன்று, “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் காதல்” என்று அர்த்தம் என்றுகவிப்பேரசுவைரமுத்துவும்எழுதியிருக்கிறார்.
இளைஞர்களே,
வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
தோள்கள் உனது தொழிற்சாலை - நீ தோல்விகள் ஏதும் உனக்கில்லை தொடுவானம் தான் உன் எல்லை
வேங்கைப் புலிநீ தூங்குவதா? இருட்டைக் கிழிக்கும் வெளிச்சக் கீற்று எங்கே கிழக்கெனத் தேடுவதா?
விழிவிழி உன்விழி நெருப்புவிழி உன்
என்ற தாராபாரதியின் பாடலிலிருந்து சில வரிகளோடு எனது உரையை நிறைவு செய்கிறேன்! நன்றி! வணக்கம்!
|